கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது பொது மக்களின் பொறுப்பாகும் மட்டு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவிப்பு

 


 
 
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு பொருளாதார ரீதியாக பாதிப்பினை எதிர் கொண்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை விமர்சனம் செய்வது பொருத்தப்பாடான விடயல்ல, விமர்சனம் தேவையான விடயமாக கருதப்படுகின்ற போதிலும் தற்போதைய சூழ் நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடுவதே நாட்டு மக்கள் அனைவருடைய வேண்டுதலாகும்.
 
இவ்வாறு பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளரும் ,மட்டு மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக்குழுவின் பிரதித் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தனது அகவை தினத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கும் போது தற்போது எழுந்துள்ள கொரோனா வைரஸ்  பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற பிரச்சினையாகும்.இதற்கு தீர்வு காணும் பாரிய முயற்சியில் அரசாங்கமானது செயற்பட்டு வருகின்றது.
 
இருந்த போதிலும் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பினை குறைக்கும் பாரிய கடமைப்பாடு மக்களைச் சார்ந்ததாகவுள்ளது.அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஒவ்வொரு பொது மகனும் செயற்பட வேண்டும்.அப்போதுதான் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட முடியும் எனத்தெரிவித்தார்.

Related posts