கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .

கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது .

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு   

தற்போது நாட்டில் கொரோன வைரஸ்  பரம்பல் அதிகரித்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைய பொலிஸாரும்  இராணுவத்தினரும் இணைந்து நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் பொதுமக்களுக்கான அறிவூட்டல் நிகழ்வுகளும் , கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு   மாவட்டத்தின் 12 பிராந்திய பொலிஸ்  பிரிவுகளில்  கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும்    நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன .

அந்த வகையில் கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் நடவடிக்கை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  நிலைய  பொலிஸாரின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு நகர் பகுதிகளில் கொரோன வைரஸ் தொற்றுநீக்கி திரவம் விசுறும் பணிகள்   முன்னெடுக்கப்பட்டன .  இந்த தொற்றுநீக்கி விசுறும்  பணியில்  மட்டக்களப்பு . வாகான போக்குவரத்து  பொலிஸ்   பிரிவு பொறுப்பதிகாரி எஸ் . ராஜபக்ஸ உட்பட மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்  நிலைய உத்தியோகத்தர்கள் , மக்கள் தொடர்பாடல்  பிரிவு பொலிஸ்  உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்

Related posts