கொவிட் 19 தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில்  சீரற்ற கால நிலைக்குமத்தியில் வெல்லாவெளிப் பொலிசாரினால் கொவிட் 19 தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நந்தசிறி தலைமையில் 3 ஆம் திகதி வியாழாக்கிழமை நடைபெற்றது.

இலங்கையில் தீவீரமாக பரவிவருகின்ற கொவிட 19 தொற்றுநோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

இவ்நோய் தொற்றாதவகையில் சுகாதார அறிவுரைக்கு அமைய சமூக இடைவெளியை அதாவது ஒருமீற்றர் இடைவெளித்தூரத்தில் இருப்பதனை நாளாந்தம் எடுக்கவேண்டும்,கூட்டமாக இருப்பதனைத்தடுத்தல்,கைகளை நன்றாக சவர்க்காரம் இட்டுக் கழுவுதல், பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருத்தல் போன்ற அறிவுறுத்தல்களை வீதியால் சென்றவாகனங்களில் ஒட்டியதுடன் பயனிகளுக்கும் பொலிஸாரால் வழங்கி வைத்து அறிவுறுத்தினர

 

Related posts