சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களில் 26832 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அமிர்தகலாதேவி பாக்கியராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அமிர்தகலாதேவி பாக்கியராசா குறிப்பிடுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:-மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் உள்ள பொதுமக்கள் புதிய சமுர்த்தி நிவாரணம்(முத்திரை)தங்களுக்கு வழங்குமாறு 36235 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணபித்துள்ளார்கள்.இவ்வாறு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான புதிய சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்காக பொருத்தமானவர்களை மாவட்ட சமுர்த்தி திட்டமிடல் பிரிவு தேர்ந்தெடுத்தது.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 9403 பேர்களின் விண்ணப்பம் சமுர்த்தி திட்டமிடல் பிரிவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தொழில் செய்பவர்களாகவும்,வருமானம் கூடியவர்களாகவும்,இரட்டைப்பதிவு செய்தவர்களாகவும்,காணப்பட்டுள்ளதால் விண்ணப்பித்துள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வறுமையானது 4.5ஆக காணப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை 11.5 ஆக உயர்வடைந்துள்ளதால் சமுர்த்தி நிவாரணம்(முத்திரை,கொடுப்பனவு)கோரியவர்களுக்கு குறுகிய காலத்தில் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர்,சமுர்த்தி அமைச்சு,கிழக்கு மாகாண ஆளுநர் கவனம் செலுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்கின்றார்கள்.

Related posts