சம்மாந்துறை , அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

சம்மாந்துறை – மல்கம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 200 ஜெலட்னைட் குச்சிகளும் ரி – 56 ரக துப்பாக்கிகள் மூன்றும் டெட்டனேட்டர்களும் கைத்துப்பாக்கிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பாழடைந்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளவர்களில் பெண்னொருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை – பாலமுனை கடற்கரை பகுதியிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

Related posts