சற்றுமுன் வெள்ளவத்தையில் வெடிப்பு சம்பவம்!

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவோய் திரையரங்குக்கு அருகிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts