சாரதிகள் தப்பிக்க முடியாது…! பொலிசாரிடம் புதிய உபகரணம்

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை மதிப்பீடு செய்வதற்காக மோட்டார் வாகன பொலிஸார் பல வருடங்களாக பொதுவான வேகத்தை மதிப்பிடும் உபகரணங்களை பயன்படுத்திவந்தனர்.

இதன்மூலம் வேகத்தை மதிப்பீடு செய்துபோதிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு அப்பால் செல்லும் வாகனங்களுக்கான வாகனத்தின் இலக்கத்தகடுகளிலுள்ள இலக்கத்தை வாகன மாற்றுதிசையில் பிரவேசிக்கும் மத்திய நிலையத்திலுள்ள பொலிஸ் பிரிவில் அறிவிக்கும் நடைமுறையே இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பொலிஸ் பிரிவிற்கு வளர்ச்சிகண்ட தொழில்நுட்பத்துடனான வேகத்தை மதிப்பீடு செய்யும் உபகரணங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறிப்பிட்ட வேகத்திற்கு அப்பால் செல்லும் வாகனத்தை கண்டுபிடிப்பதற்கும், வாகன இலக்கத்தை அந்த சந்தர்ப்பத்திலேயே அடையாளம்கண்டு கொள்ளவும், வேகம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மத்திய நிலையத்தின் பொலிஸ் பிரிவிற்கு உடனடியாக வழங்கமுடியும்.
இதற்காக கொண்டுவரப்பட்ட வேகத்தை மதிப்பீடு செய்வாதற்கான உபகரணம் பொலிஸாரினால் பரீட்சார்த்தமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts