சிப்தொர ‘கல்விப் புலமைப் பரிசில்’ வழங்கும் நிகழ்வு

சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூத்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக கல்முனை வலயப் பிரிவில் சமூர்த்தி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளில் 2018/19ஆம் ஆண்டு கா.பொ.சா தரம் சித்தியடைந்து கா.பொ.உயர் தரம் கற்க தகுதி பெற்ற மாணவர்களுக்கு ‘சமூர்த்தி சிப்தொர கல்விப் புலமைப் பரிசில்’ திட்டத்தின் ஊடாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (04.03.2020) கல்முனை பிரதேச செயலக சமூரத்தி பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட செயலக சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர், சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்கள் ஏ.சி.எம். நஜீப் , சமுர்த்தி திட்ட முகாமையாளர், ஏ.எம்.எஸ்.நயிமா, முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ். றிபாயா, சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோஸஸ் புவிராஜ், சமுர்த்தி உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், என் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சமூர்த்தி பெறும் பயனாளிகளின் 184பிள்ளைகளுக்கு கா.பொ.த உயர் தரம் கற்பதற்கு மாதா மாதம் 1500 ரூபாய் கல்வி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Related posts