சுகாதாரத்துறைக்கு உதவிக்கரம் நீட்டும் மனிதஅபிவிருத்தித்தாபனம்.

நாடு அவசரநிலையில் சிக்கிக்கொண்டிருக்கின்ற  இன்றைய காலகட்டத்தில்   இலங்கையின் பலபாகங்களிலும்  பணியாற்றிவரும் மனித அபிவிருத்தித்தாபனம்  நாட்டின் சுகாதாரத்துறைக்கு உதவிக்கரம்நீட்டிவருகிறது.
 
சுகாதாரப்பணியாளர்கள் பயன்படுத்தும் கையுறை முகக்கவசம்   கைகழுவுவதற்கான  திரவப்போத்தல் தொற்றுநீக்கிகள் போன்ற பொருட்களை  வழங்கிவருகிறது.
 
முதற்கட்டமாக மத்திய மாகாணத்தின் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகங்களான நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு உதவிகளை செய்துவருகின்றது.
சுகாதாரப்பொருட்களை கையளிக்கின்ற நிகழ்வு முதற்கட்டமாக கண்டியிலும் நுவரேலியாவிலும் நேற்று நடைபெற்றன.
 
இந்நிகழ்வு மனித அபிவிருத்தி தாபனத்தின் இயக்குனர் பி.பி.சிவப்பிரகாசத்தின்  வழிகாட்டலின் கீழ் இணைப்பாளர்களான பொன்னையா ஸ்ரீகாந்த் நிராங்க நாயக்க ஆர். ரவிராம் மற்றும் ஆர்.நடராசா ஆகியோர் களத்தில் செயற்பட்டுவருகின்றனர்.
 
மருத்துவ உதவி பொருட்களை கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் சார்பாக வைத்தியர்  நிதர்சினி  நுவரெலியா  மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் சார்பாக வைத்தியர் அலகக்கோன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர்கள்  காலத்தினால் செய்த இவ்வுதவிக்காக தாபனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
 
மனிதஅபிவிருத்தித் தாபனப்பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவிக்கையில்
 
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றது. எமது நாட்டிலும் இக்கொரோனா வைரஸ் (covid19) தொற்றுக்காரணமாக முழுநாடே முடங்கிகிடக்கின்றது. மக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு சேவையாற்றி வருகின்ற மனித அபிவிருத்தி தாபனம் இத்தொற்றுக்காரணமாக எமது நாட்டின் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகரம் நீட்டியுள்ளது.
 
சுனாமி  பாரிய வெள்ளம் போன்ற அனர்த்தவேளைகளில்  நாட்டின் பலபாகங்களுக்கும் சென்று ஜீவசேவையாற்றிவருகின்ற  மனிதஅபிவிருத்தித்தாபனம் கண்டியை தலைமையமாகவும் வடகிழக்கில்  கிளைகளையும்  கொண்டுஇயங்கிவருவது தெரிந்ததே.

Related posts