சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்  குமாரவேல் தர்மபாலன் அவர்களது சொந்த நிதியின் மூலம் உதவி வழங்கிவைப்பு

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்  குமாரவேல் தர்மபாலன் அவர்களது சொந்த நிதியின் மூலம் சுயதொழிலுக்காக் கடை அமைத்து அதனை திறந்துவைக்கும் நிகழ்வு சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் திங்கட்கிழமை 11 ஆம் திகதி கல்லடியில்  இடம்பெற்றது.

பெண் தலைமை தாங்கும்  குடும்பங்களுக்கான உதவிச்செயற்பாடுகளுக்கு அமைய கல்லடி திருச்செந்தூர் இரண்டாம் குறுக்கில் வசிக்கும் திருமதி புஸ்பநாதன் வேதலதா அவர்களுக்கு 200000 நிதி உதவி மூலம் இக் கடைத் தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் திருமதி றோமிலா செங்கமலன், பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உறுப்பினர்களான ஆசிரியர் இ.ஜீவராஜ்,யுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்

Related posts