ஜனாதிபதியும்,பிரதமரும் தமது கட்சியை வளர்ப்பதிலே கவனமாக இருக்கின்றார்கள்.நாட்டின் அபிவிருத்தியோ,இனப்பிரச்சனைக்கான தீர்வையோ பெற்றுக்கொடுப்பதாக தெரியவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் – வே.இரரதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

பிரதமரும் ஜனாதிபதியும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலேயே முன் நிற்கின்றனர் .நாட்டின் அபிவிருத்தியையோ இன பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வையோ பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக தெரியவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரரதாகிருஸ்ணன் மனவேதனையுடனும் உண்மையாகவும்  தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆரம்பபிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்புவிழா  வெள்ளிக்கிழமை (04.05.2018) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி.கரனியா சுபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளாலருமான எம் .உதயகுமார்,  சிறப்பு அதிதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், உதவி கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் கல்குடா திருமதி. சாமினி ரவிராஜ் பாடசாலையின் முன்னால் அதிபர்கள். பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் பழைய மாணவ சங்கத்தினர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த பரிசளிப்பில் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களும் பாடசாலையின் இணைபாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்ளும் பாடரீதியாக கற்றலில் முதன்மை பெற்ற மாணவர்களும் கௌரவிக்கபட்டு சான்றிதழ்கள் பரிசில்கள் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கபட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்வி இராஜாங்கஅமைச்சர்:-
இந்த நாட்டில் அபிவிருத்தியும் குறிப்பாக இன பிரச்சனைக்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கிலேயே சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் இந்த பிரதமரையும் ஜனாதிபதியையும் வாக்களித்து கொண்டு வந்தோம். அதேபோல் நானும் நல்லாட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். ஆனால் தற்போது அது நடைபெறுவதாக தெரியவில்லை. இருவரும் தங்களது கட்சிகளை வளர்ப்பதிலும் அதனை புனர்த்தாபனம் செய்வதிலேயே இருக்கின்றனர்.
அபிவிருத்திகள் பின்னடைவை நோக்கி செல்கின்றது. இன பிரச்சனைக்கான தீர்வைபெற்றுக் கொடுப்பதிலும் பாரிய பின்னடைவு காணப்படுகின்றது. அதற்கான அழுத்தமும் இல்லை.

அதுமட்டும் அல்ல படித்தவர்களுக்கு வேலையாப்புகள் உட்பட மக்களின் அடிப்படை தேவைகள் எவ்வளவோ பூர்த்திசெய்யாமல் இருக்கின்றது.
இவ்வாறு தொடர்ந்து செல்லுமாயின் இந்தநாட்டின்  எதிர்காலம் உட்பட மக்களின் வாழ்வுநிலை பாதிப்பை நோக்கி செல்லும் எனவே பிரதமருமரும், ஜனாதிபதியும், தங்களது கட்சிகளை வளர்ப்பது போல் அபிவிருத்திக்கும் இன பிரச்சனைக்குமான தீர்வினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.  நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும் அதற்கான பூரண அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க முடியும்.

இப்பாடசாலைக்கு புதிய அதிபரை நியமித்துள்ளோம்.புதிய அதிபரை நியமிப்பதில் ஆதரவுகளும்,எதிர்ப்புக்களும் எனக்கு வந்தது.பாடசாலையின் கல்விச்சமூகமும்,பழைய மாணவர் சங்கமும் இணைந்து என்னிடம் சொன்னார்கள் புதிய அதிபரின் கையில் பாடசாலையை கொடுத்துப்பாருங்கள் புதிய அதிபர் பாடசாலையை நன்றாக நடாத்திக் காட்டுவார் என்று. நான் உடனே அதிபரை அழைத்து விசாரித்து கேட்டேன்.அதற்கு புதிய அதிபர் சொன்ன பதில் என்னிடம் பாடசாலையை ஒப்படைத்தால் நான் நடாத்திக் காட்டுவேன் என்று.அவரின் நம்பிக்கை வீன்போகவில்லை.அதிபரின் நம்பிக்கையையும்,எண்ணத்தையும் நான் பாராட்டுகின்றேன்.ஒரு இராஜகுமாரி போன்று ஒரு இளவரசி வந்து பாடசாலையை நடாத்துவதை நான் பாராட்டுகின்றேன்.
ஆசிரியப்பணி என்பது சிறாப்பானது.ஆசிரியர்கள் ஒற்றுமையாகவும்,உண்மையாகவும், ஒத்துழைப்பு வழங்கும்போதுதான் ஒருபாடசாலையின் கல்வியின் வளர்ச்சிப்பாதை சிறப்பாகவுள்ளது.இப்பாடசாலையின் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை இப்பாடசாலையின் அதிபருக்கு வழங்க வேண்டும்.ஒரு கிரிக்கெட் அணியில் கப்டனால் மட்டும் வெற்றியை தீர்மானிக்க முடியாது.அந்த அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் முழுமையாகவும்,அர்ப்பணிப்பாகவும் செயற்படுவதன்மூலம்தான் அவ்வணியினர் வெற்றிவாகை சூடமுடியும்.அதேபோன்றுதான் ஆசிரியர்கள் ஏணி போன்றவர்கள்.அவர்கள் பலரை ஏணியாகவிருந்து ஏணியில் ஏற்றுபவர்கள்.ஏணி ஒருநாளும் மேலே போவதில்லை.இப்பாடசாலையின் ஆசிரியர்களும் பல மாணவர்களை ஏணியில் ஏற்றியிருக்கின்றார்கள்.அதேபோன்றுதான் தோணியும் பலரையும் கரை சேர்க்கும்.தோணி ஒருநாளும் கரைக்கு மேலே செல்லாது.அஃதே இப்பாடசாலையும் பலரை தோணியாக இருந்து கரை சேர்த்துள்ளது.

இன்று தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காணாமல் உள்ளது.காராணம் என்னவெனில் தமிழ்சமுதாயத்தில் நல்லது செய்தால் நல்லதிற்கு எதிர்ப்புக்களும் வரும்.தமிழ்சமுதாயம் நாலடி ஏறி் முன்னேற்றம் கண்டால் இரண்டடி பிடித்து இழுப்பார்கள்.இதுதான் தமிழ்சமுதாயத்தின் பிரச்சனையாகும்.இதுவொரு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த சாபக்கேடாகும்.ஒற்றுமை இல்லாமை,இனமத வேறுபாடுகள்,குளறுபடிகள் தமிழ்சமுதாயத்தில் களையப்பட வேண்டும்.நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்க வேண்டும்.

தற்போதைய இலங்கை அரசாங்கத்தால் கல்விக்கு நிறைய முன்னுரிமை வழங்கப்பட்டு அதிலும் பாடசாலைகளுக்கு நிறையப்பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 5ஆண்டுகளுக்கு 7400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அருகில் உள்ள பாடசாலை,நல்ல பாடசாலை அமைப்பதற்கே இவ்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பாடசாலையின் கல்விக்கு நிதி ஒதுக்கப்பட்டு சிறந்த கல்வியின் ஊடாக நற்பிரஜை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

அருகில் உள்ள பாடசாலை,நல்ல பாடசாலை செயற்திட்ட அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு இம்மாதம் இறுதிப்பகுதி அல்லது எதிர்வரும் யூன் மாதம் முதலாம் திகதி கொழும்பு உட்பட நாடளாவியரீதியில் இடம்பெறவுள்ளது.அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை வேலைத்திட்ட நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இம்மாதம் 18,19ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ள விருகின்றார்கள்.சிவானந்தா தேசியபாடசாலை,தாழங்குடா கல்வியல்கல்லூரி ,ஆசிரியர் பயிற்ச்சி கலாசாலை போன்றவற்றை பார்வையிடுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும்,ஏனைய பாடசாலைகளையும்,அதன் பௌதீக வளங்களையும் பார்வையிடுவதற்கு வருகை தரவுள்ளார்கள்.

இந்த அரசாங்கத்தின் பிரதமர் கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் நோக்கில் 4000 மேற்பட்ட தரம் -3 அதிபர்களை நியமித்துள்ளது.இலங்கை கல்விச்சேவை நிருவாக அதிகாரிகளை 800 பேரை நியமித்துள்ளது.தற்போது பாடசாலையில் கல்வி புகட்டுகின்ற  மாணவர்களுக்கு அவார்களின் நன்மைகருதி இரண்டு இலட்சம் ரூபா(200,000)காப்புறுதி செய்யப்பட்டுள்ளது.நாட்டிலே படிக்கின்ற மாணவர்களின் நன்மைகருதி 13வருடம் கட்டாயக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.க.பொ.சாதாரணம் படித்து க.பொ.த உயர்தரம் படிக்காத மாணவர்களின் நன்மை கருதி திறன் அபிவிருத்தியை மாணவர்களுக்கு  ஊட்டி நாட்டுக்கு நற்பிரஜையை உருவாக்கும் நோக்கில்  பிரதமரும்,கல்வி அமைச்சரும் இணைந்து 42பாடசாலைகளை தெரிவு செய்து திறன் அபிவிருத்தியை செயற்படுத்தவுள்ளது.இதற்கென மேலும் 150 பாடசாலைகளை இரண்டாம் கட்டத்தில் தெரிவுசெய்து செயற்படுத்தவுள்ளது.

உலகத்தின் கல்விமுறைகள் நாளுக்குநாள்  மாற்றமடைந்து செல்கின்றது.தற்போது டிஜிட்டல் முறையிலான கல்விமுறை மாற்றமடைந்துள்ளது.இந்தியாவிலும் டிஜிட்டல் கல்விமுறைதான் அறிமுகப்படுத்தியுள்ளது.இலங்கையிலும் கல்விமுறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றவுள்ளோம்.அதாவது ஆசிரியர்கள் பிள்ளைகளை படிப்பிப்பதற்கு அதற்குரிய சகல ஆவணங்களும் கரும்பலகையில்,வகுப்பறையில் இருக்கும்.டிஜிட்டல் கல்விமுறையையும்,அதன் நுட்பங்கள்,திறன்களையும் ஆசிரியர்கள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.மாணவர்களின் கேள்வி,சந்தேகங்களை போக்குவதற்கு ஆசிரிரியர்கள் முதலில் திறன்விருத்தியுடன் இருக்க வேண்டுமென தெரிவித்தார்.

Related posts