ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா -ஆதரவு வழங்க மறுக்கும் சகோதரன்!

எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க விரும்புகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாரா என்பது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க விரும்புகிறது.

எனினும் தற்போதைய அரசாங்கம் அவர் மீண்டும் போட்டியிட சட்டரீதியான தடையொன்றை போட்டிருக்கின்றது.

ஆகவே அவரின் சார்பாக ஒரு வேட்பாளரை நியமிக்குமாறு நாங்கள் அவருக்குக் கூறியுள்ளோம்.

ராஜபக்ச குடும்பத்திலிருந்து எவரையாவது அவர் தெரிவு செய்தால் நாங்கள் ஒரு பெயரை பரிந்துரைப்போம். அவருக்கு எமது நேச கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெறுவது அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts