தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்துள் விவசாயம் செய்ய புதிய நடைமுறை!

 
  வி.ரி.சகாதேவராஜா    


அடுத்துவரும் 07 நாட்களுக்குள் மூன்று கமநல சேவை மத்திய நிலயங்களான அக்கரைப்பற்று கிழக்கு – 300 அக்கரைப்பற்று மேற்கு – 400, அட்டாளைச்சேனை -100 பிரிவுகளிலிமிருந்து விவசாயிகள் அதிஉட்சமாக வேளான்மை நடவடிக்கைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுவார்கள்.

இத்தகைய தீர்மானம் கல்முனைப்பிராந்தியத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனாக்காலகட்டத்தில் இவ்வாறு ஏனைய துறைகளையும் சுகாதார நடைமுறைகளுடன் கட்டுப்பாட்டுன் இயங்குவது தொடர்பாக நடைபெற்ற முதல்கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கொறோனா பரவலின் மத்தியில் விவசாயிகளின் தற்கால நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண. சுகுணன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சனியன்று நடைபெற்றது.

கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நனமைபயக்கும் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

மாவட்ட விவசாயப்பணிப்பாளர் எம.எஸ்.எ.கலீஸ் பிராந்திய தொறற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் நாகூர் ஆரிப் பிரதிபிராந்தியபணிப்பாளர் றஜாப் மாவட்ட மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எ.ஜகுபர் மாவட்ட விவசாய அமைப்புஅதிகாரசபை செயலாளர் எம்.எ.ஸபிஹ் தேசிய விவசாய அமைப்பு அதிகார சபை உறுப்பினரும் தொடர்பாடல் இணைப்பாளர்கள் மற்றும்  யு.எல். சம்சுடீன் – கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர். அக்கரைப்பற்று – கிழக்குஇ அட்டாளைச்சேனை. யு.எல்.ஏ. ஹமீட் – கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர். அக்கரைப்பற்று – மேற்கு. ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆராயப்பட்ட பிரச்சினைகள் :
1. விவசாயிகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல்.
2. நாட்களை வரையறுத்தல்.
3. வயலுக்கு சென்று வரும் நேரத்தினை வரையறுத்தல்.
4. கொறோனா தொற்று நோயாளிகளுடன் தொடர்பினை கொண்ட விவசாயிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுதல்.
5. அனுமதி தொடர்பான வரையறைகளும் பொறிமுறைகளும்.
6. அனுமதி வழங்கியதன் பின்னர் மேற்பார்வை செய்தல்.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
01. அடுத்துவரும் 07 நாட்களுக்குள் மூன்று கமநல சேவை மத்திய நிலயங்களான அக்கரைப்பற்று கிழக்கு – 300 அக்கரைப்பற்று மேற்கு – 400இ அட்டாளைச்சேனை -100 பிரிவுகளிலிமிருந்து விவசாயிகள் அதிஉட்சமாக வேளான்மை நடவடிக்கைக்காக நாளாந்தம் அனுமதிக்கப்படுவார்கள்.
02. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு அனுமதி இல்லைஇ அனால் அவர்களின் விவசாய காணி நடவடிக்கைகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள விவசாயிகளைக் கொண்டு மேற்கொள்ள முடியும்.
03. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய நிருவாக பிரதேசங்களுக்குள் விவசாயிகளின் நடவடிக்கை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குரிய பொறுப்பு அதிகாரிகளோடு கலந்துரையாடிய பின்னர் முன்னெடுக்கப்படும்.


04. நாளுக்கு ஒரு நிறத்திலான அனுமதி அட்டை வழங்கப்படும். அதனை கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்யும்.
05. விவசாயிகளின் விபரங்கள் 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் அந்தந்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு சமர்பிக்கப்படவேண்டும்.

06. விவசாயிகள் காலை 6.00மணிக்கு முன்னர் தத்தமது பிரதேசங்களில் இருந்து வேளான்மை நிலங்களுக்கு சென்று விடவேண்டும்.
07. வேளான்மை நில பிரதேசங்களில் உள்ள தேனிர் கடைகளுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு தேவையான உணவுகள் அவர்களினால் எடுத்துச் செல்லப்படவேண்டும்.
08. விவசாயிகளின் செயற்பாடுகள் பொலிஸ்இ முப்படையினர்இ விமானப்படையினர்இ மாவட்ட விவசாயிகளின் அமைப்புக்களின் அதிகார சபைஇ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்இ விவசாய அமைப்பின் பொறுப்பானவர்களினால் மேற்பார்வை செய்யப்படும்.
09. கொறோனா பரவலை தடுப்பதற்கான அனைத்துவிதமான செயற்பாடுகளும் சகல விவசாயிகளினாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
10. சுகாதர அமைச்சினால் அறிவுறுத்தப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறும் விவசாயிகள் மற்றும் பொறுப்பு உத்தியோகத்தர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
11. மேற்குறித்த தீர்மானங்கள் ஒன்றோ அல்லது பலவே அவ்வப்போது எமது பிராந்தியத்தில் காணப்படும் COVID 19 கழநிலவரத்துக்கு ஏற்ப மாறுபடும்.

Related posts