தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சு பதவிக்காக தமிழ் மக்கள் வாக்களிவில்லை பா.அரியநேத்திரன்.மு.பா.உ

தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சர் பதவிகளை பெறவேண்டும் என சிலர் ஆலோசனை கூறுகின்றனர் வடகிழக்கு தமிழ்மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு அமைச்சர் பதவிகளை பெற்று அபிவிருத்தி செய்யுங்கள் என எந்த தேர்தலிலும் வாக்களிக்கவில்லை அதேபோல் தமிழ்தேசிய கூட்டமைப்பும் எந்த தேர்தல் பிரசாரத்திலும் அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அமைச்சர் பதவிகளை பெற்று அபிவிருத்தி வேலைவாய்புக்களை பெற்றுத்தருவோம் என எந்த சந்தர்ப்பத்திலும் கேட்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் பல தடவை அமைச்சர் மனோகணேசன் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் உட்பட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை பெறவேண்டும் என கூறுகிறார் ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே இதற்கு எந்த கருத்தையும் கூறவில்லை ஒருவேளை அவர்கள் மௌனம் காப்பது அமைச்சர் பதவிகளை விரும்புகின்றார்களா என ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் கேட்ட போது மேலும் கூறிய அவர்.

அமைச்சர் மனோகணேசன் வடகிழக்கு மக்களின் அபிவிருத்தி வேலைவாய்புகள் தேவைகள் என்பவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறான கருத்தை ஊடகவாயிலாக முன்வைக்கின்றார் அது அவரின் தனிப்பட்ட எண்ணம் உண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சர் பதவிகளை பெற வேண்டும் என தலைவர் சம்மந்தன் ஐயாவிடமோ அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ நேரடியாக கேட்டால் அவர்கள் அதற்கான பதிலை அமைச்சர் மனோகணேசனிடம் தெரிவித்திருப்பார்கள் ஆனால் ஊடகங்களில் யாரும் அவரவர் கருத்துக்களை கூறும்போது எல்லாவிடயங்களுக்கும் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இவ்வாறான கருத்தை சம்மந்தன் ஐயாவோ ஏனய தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோ அலட்டிக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 2001,ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாட்டு அரசியல் உள்ள காலத்தில் உருவாக்கம் பெற்று இன்றுவரை நான்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள்,இரண்டு மாகாணசபை தேர்தல்கள், பலவகையான கட்டம் கட்டமாக வட கிழக்கில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்கள் என அனைத்து தேர்தல்களிலும் வடகிழக்கு மக்களின் பெரும்பான்மை பலத்துடன் தனித்துவமாக தமது அரசியல் செயல்பாட்டை இன்றுவரையும் முன் எடுக்கும் ஒரு மக்கள் சக்தியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு உள்ளது கடந்த அத்தனை தேர்தல்களிலும் தமது கட்சி கொள்கையாக தேர்தல் விஞ்ஞாபனங்களில் தாம் அமைச்சர் பதவிகளை பெற்று அபிவிருத்தி செய்வதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்கவில்லை.
குறிப்பாக 2009,மே,18,ம் திகதி முள்ளிவாய்கால் அவலம் ஏற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆயுதப்போர் மௌனித்த பின்பும் இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் இரண்டு மகாணசபை தேர்தல்களிலும் தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பை தமிழ் மக்கள் அங்கீகரித்து ஆதரவு வழங்கிய நோக்கம் அமைச்சர் பதவிகளுக்காக இல்லை என்பது அனைவரும் அறிந்தவிடயம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் காலத்தில் உருவாக்கப்பட்டு 2009,மே,18,ம் நாள்வரையும் முழுநேர அரசியல்பணியை செய்யவில்லை பகுதிநேர அரசியல்பணியைத்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு செய்தது அந்த காலக்கட்டத்தில் முழுநேர வடகிழக்கு தாயக அரசியல் ரீதியான சகல விடயங்களும் விடுதலைப்புலிகளே முன்எடுத்தனர் இது அப்போதய ஜனாதிபதி மகிந்தராஷபக்ச தொடக்கம் இப்போதய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவரையும் ஏன் அமைச்சர் மனோகணேசன் ஐயாவுக்கும் தெரிந்தவிடயம் அதுமட்டுமல்ல இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான வரவு செலவு திட்ட நிதி கூட கடந்த 2006,ம் ஆண்டுவரை இலங்கை அரசினால் ஒதுக்கப்பட்ட வரலாறும் உண்டு.

2009,மே,18,ம் திகதிக்குப்பின்னே முழு நேர அரசியல் பணியை தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்எடுக்கின்றது. அந்த அடிப்படையிலேயே கடந்த 2015,ஐனவரி மாதம் ஐனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்ததும் அதன்பின் 2015 ஆகஷ்ட் மாதம் பொதுத்தேர்தலுக்குப்பின் தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிர்கட்சி பதவி கிடைத்ததும் நல்லாட்சி என்ற பெயரில் முதல்தடவையாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்,ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சியமைத்து பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றம் பெற்று ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கமும் அதனூடாக வடகிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு பெறும் நோக்கிலான விடயமும் முன்னெடுத்து வரும் வேளையில் பல இழுபறிநிலைகள் எழுந்துள்ளன கடந்த 70,வருடங்களாக தொடர்ச்சியாக தந்தை செல்வா,தலைவர் பிரபாகரன் போன்ற அரசியல் தலைவர்களால் பெறமுடியாத தீர்வை தற்போதய தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையில் சர்வதேசத்தின் அழுத்தங்களுடன் பெறலாம் .

என்ற நம்பிக்கையில் ஜனநாயரீதியான இராயதந்திர செயல்பாடுகளை தமிழ்தேசியகூட்டமைப்பு பல விட்டுக்கொடுப்புகளுடன் பேச்சுவார்தைகள் ஊடாக பெறுவதற்கு முயற்சிகளை எடுத்து வரும் இவ்வேளையிலும் அதற்கா சாதகபோக்கை இன்னும் இந்த நல்லாட்சி அரசாங்கம் காட்டவில்லை என்பதும் தொடர்ந்தும் தமிழ்தேசியகூட்டமைப்பும் அதன் தலைவரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற காரணத்தால் சம்பந்தன் ஐயாவும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் அமைச்சு பதவிகளை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அமைச்சர் மனோகணேசன் இந்த கருத்தை தெரிவித்திருக்கலாம் என்று ஒரு வாதத்துக்கு அதை வைத்துக்கொண்டாலும் அப்படி தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சர் பதவிகளை பெற நினைப்பது என்பதும் பெறு வது என்பதும் கடந்த எழுபது வருடமாக வடகிழக்கின் தாயக விடுதலைக்காக உயிர் நீத்த உறவுகளுக்கும் அந்த மண்ணுக்கும் இனத்திற்கும் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை எனது கருத்து.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைச்சு பதவிகளை பெற்று அபிவிருத்தி வேலைவாய்ப்பு சலுகைகளை பெறநினைத்திருந்தால் 2004,2010,2015,ஆரம்பத்தில் பல அமைச்சுக்களை பெற்று பல வடகிழக்கை சிங்கப்பூராக மாற்றியிருக்க முடிந்திருக்கும் ஆனால் வடகிழக்கு மக்களின் அரசியல் பலம் என்பது பேரினவாத சக்திகளுடன் இரண்டற கலந்து எமது தனித்துவம் இல்லாமல் போய் இருக்கும் இந்த உண்மையை அமைச்சர் மனோகணேசன் புரியவேண்டும்.

தமிழ்தேசியகூட்டமைப்பு எக்காரணம் வடகிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமை பெறும்வரை தமது அரசியல் பணியை மேற்கொள்ளுமே தவிர எக்காரணத்திற்காகவும் அமைச்சர் பதவிக்காக சோரம் போகும் கட்சி இல்லை எனவும் பா.அரியநேத்திரன் மேலும் கூறினார்.

Related posts