தமிழ்தேசிய கொள்கையில் உறுதியுடன் இருந்தவர் சட்டத்தரணி் சோமசுந்தரம் அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாது! பா.அரியநேத்திரன் மு.பா.உ,

அமரத்துவம் அடைந்த இளையதம்பி சோமசுந்தரம் சட்டத்தரணி தமிழ்தேசிய கொள்கையுடன் இறக்கும் வரை இருந்தார் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
 
கொரோணா நோயால் உயிரிழந்த சட்டத்தரணி சோமசுந்நதரம் அவர்களின் பிரிவு தொடர்பாக மேலும் கூறுகையில்,
 
எருவிலை பிறப்பிடமாக கொண்ட அமரர் இளையதம்பி சொமசுந்தரம் அவர்கள் பாடசாலையில் படிக்கும்போதே இனப்பற்றும் தமிழ்பற்றும் உள்ள ஒருவராக திகழ்ந்தார்.
 
ஆங்கில ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் தமது மணவாழ்க்கையை எனது அக்காவைவை அம்பிளாந்துறையில் திருமணம் செய்து அவரின் சொந்த ஊரான எருவிலில் ஊரிலேயே வாழ்க்கையை்நடத்தினர்.
 
ஆங்கில ஆசிரியராக இருந்து கொண்டே அவரின் திறமையால் சட்டத்தரணியாக பதவி ஏற்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பல வழக்க்கறிஞராகவும் பணிபுரிந்தார்.
 
2000, ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக தமிழர் விடுதலை கூட்டணியில் மட்டக்களப்பு மாவட்ட எட்டுவேட்பாளர்களில் ஒருவராக களம் இறங்கினார் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றியீட்டா விட்டாலும் தமிழ்தேசிய பற்றாளராக தொடர்ந்தும் உழைத்தார்.
 
2004, ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நான்(பா.அரியநேத்திரன்) வேட்பாளராக களம் இறங்கியவேளையில் எனது வெற்றிக்காக அயராது பாடுபட்டார்.
 
அதேபோல் 2010, பொதுத்தேர்தலிலும் எனது வெற்றிக்காக உழைத்தார், தொடர்ச்சியாக 2015, 2020, பொதுத்தேர்தல்கள், 2012, மகாணசபை தேர்தல், 2018, உள்ளூராட்சிசபை தேர்தல் எல்லாவற்றிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக பல கூட்டங்களில் உரையாற்றி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஓயாது செயல்பட்டார்.
 
2012, ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சி மட்டக்களப்பு மாநாடு இடம்பெற்ற போது பல அச்சுறுத்தல்கள் தடைகள் தேவநாயகம் மண்டபம் குண்டுத்தாக்குதல் கறுப்பு கொடிகளை கட்டி அடக்க நினைத்த ஒட்டுக்குழு அடாவடிகளுக்கு எல்லாம் எங்களுடன் உறுதுணையாக நின்று மாநாட்டை சரிவர நடத்த உதவியவர்களுள் சட்டத்தரணி சொமசுந்தரம் அவர்களின் பங்கு அளப்பரியது.
 
இலங்கை தமிழரசு கட்சி மத்திய குழு உறுப்பினராக 2012, ம் ஆண்டு தொடக்கம் 2019, வரை மிகவும் உறுதியாக செயல்பட்டார்.
 
இறுதியாக 2020, பொதுத்தேர்தல் இடம்பெற்ற போதும் அவரின் உடல் நிலை காரணமாக நேரடியாக பொதுப்பிரசாரங்களில் ஈடுபடாவிட்டாலும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாக என்னிடம் பல ஆலோசனைகளை வழங்கினார்.
 
ஒரு தமிழ்தேசிய பற்றாளனாக தமிழ்தேசிய உணர்வாளனாக வாழ்ந்து இக்கட்டான பல காலங்களில் உயிர் அச்சுறுத்தல்களை தாங்கி வாழந்த நேர்மையான ஒப்பற்ற தலைவரை நாம் இழந்துள்ளோம்.
 
எமது அக்காவை திருமணம் முடித்து நான்கு பிள்ளைகளை ஈன்று அவர்களை கல்வி அறிவு ஊட்டி வளர்த்து இரண்டு பெண்பிள்ளைகளும் சட்டத்தரணிகளாகவும், இரண்டு ஆண் பிள்ளைகளை பொறியிலாளர்களாகவும் ஆளாக்கி அவர்களின் உயர்ச்சிக்கு அடித்தளம் இட்ட நல்ல குடும்பத்தலைவரை நாம் இழந்துள்ளோம்.
 
மொத்தத்தில் சிறந்த ஆளுமையான அறிவுஜீவியாகவும் சோரம் போகாக உறுதியான தமிழ்தேசிய பற்றாளராகவும் வாழ்ந்து வழிகாட்டிய எமது அத்தான் 74, அகவையில் கொடிய கொரோணா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
 
நேரடியாக அஞ்சலி செலுத்த முடியாத மனவேதனையுடன் உறவினர் நாம் தவிக்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திப்பதுடன் அன்னாரின் மறைவை யொட்டி தொலைபேசிமூலமாகவும் இணையத்தள முகநூல் ஊடாகவும், நேரடியாகவும் அஞ்சலிகளை தெரிவித்த அனைவருக்கும் எமது நன்றிகளையும் தெரிவிப்பதாக மேலும் கூறினார்.
 
 
 
 

Related posts