தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு  கிராமியமட்டத்தில் விழிப்பை ஏற்படுத்தவேண்டும்

;   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு கிராமிய மட்டத்தில் பாரிய விழிப்புணர்வுகளை முன்னெடுக்கும் போதுதான் எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்லமுடியும் என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்

துறைநீலாவணையில் தனக்கு வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றபோது மேற்கண்டவாறுதெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக்கட்சியாக இருக்கின்றதே தவிர அதற்கென்று ஒருகட்டமைப்போ நிருவாக ஒழுங்கமைப்போ இல்லை அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளாக இருப்பதனால் பதிவுசெய்யப்பட்டு கிராமிய மட்டங்களில்; விளிப்புணர்வுகளை ஏற்படுத்தப்படவேண்டும் இவ்வாறு செயற்படாமல் இருக்குமானால் எதிர்காலத்தில் பாரிய பின்னடைவுகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்திக்க நேரிடும்.

கட்சி என்பதற்கு  அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள நான்கு தமிழ் பிரதிகளும் நிருவாக ரீதியாக ஒன்றினைந்து செயற்படுகின்றபோதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தினை ஒற்றுமையுடையதாகவும் முழுமையான அபிவிருத்தியையும் செய்ய முடியும் 

மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டியதேவை அதிகம் இருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் பொதுஜனப் பெரமுனக் கட்சி அடங்கலாக மாவட்டத்தில் 4 தமிழ் பிரதிநிதித்துவம் தெரிவுசெய்யப்பட்டு இருக்கின்றது இந்த நான்கு பேரும் கட்சியை வழக்கவேண்டும் என்பதற்காக கலந்தாலோசிக்காமல் மாவட்டத்தில் சில நிருவாக ரீதியான வேலைகளை முன்னெடுத்தால் அது அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  அனைவரையும் ஒன்றிணைத்து வேலைகளை முன்னெடுப்பதுபொருத்தமாக இருக்கும்.

தமிழ் மக்களின் உரிமை என்ற விடயத்தில் முதன்மைப்படுத்தியதாகவே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருந்துவந்தமையினால் தமிழ்ப் பகுதிகள் அபிவிருத்தி விடயத்தில் பாரிய பின்னடைவினைச் சந்தித்து இருக்கின்றது இதனால் எமது பகுதியில் உரிமையுடன் கூடியதாக அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவேண்டிய  தேவை இருக்கின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த செயற்பாடுகளை பிரச்சாரமோ விளம்பரமோ செய்யவில்லை 2009 ஆண்டில் இருந்து அரசபடைகளால் கையகப்படுத்தப்பட்ட 67 ஆயிரம் ஏக்கர் காணிகளில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுவிக்கப்பட்டது அதே போன்று 200 மேற்பட்ட அரசியல் கைதிகளில்; பலர் விடுதலை செய்யப்பட்டும் இன்னும் குறைந்த தொகையினர்கள் மாத்திரமே  இருக்கின்றனர்  இவற்றையெல்லாம் நாம் விளம்பரம் செய்யவில்லை என்றார்

Related posts