தமிழ் பேசும் மக்கள் – புலம்பெயர் தமிழர்கள் இடையே நல்லுறவு உருவாக்கம் – வட மாகாண முதலமைச்சர்

தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு உங்களின் பங்களிப்பு என்னவென வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், புலம்பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்துவதற்கு அச்சத்துடன் உள்ளதாகவும் தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம் எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தம்மைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர், அவர்களே தமது பலம் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றக் கருத்தின்படி எந்தவொரு அமைச்சரையும் நியமிக்கவோ, பதவிநீக்கவோ தமக்கு உரிமையில்லை எனக் கூறிய முதலமைச்சர், ஆளுநருக்கே அந்த அதிகாரம் உண்டு என நீதிமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தப் பணியை முன்னெடுக்க வேண்டியவர் ஆளுநரே எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், நீதிமன்றை அவமதித்ததாக தம்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், இது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆகவே இவை பற்றி விலாவாரியாக வழக்கு நடைமுறையில் இருக்கும்போது பேசுவது தவறு எனவும் வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு பதிலளித்தார்.

Related posts