தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூவ் ஹக்கீம் அரசியல் சீனில் இருந்திருக்க மாட்டார்-முன்னாள் அமைச்சர் அதா

மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்  முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றிருக்கிறார் அதை கொண்டு அம்மணத்தை மறைப்பதா தலைப்பாகை கட்டுவதா என்று கேள்வியெழுப்பினார் றவூப் ஹக்கீம் என்பவர். அந்த இடத்தில் அவர்  தெரிவித்த கருத்தே நான் கட்சியில் இருந்து விலகி செல்ல காரணம்.எனினும்  முஸ்லிம்களை தலைவர் அஷ்ரப் கோமண துண்டுடன் அனுப்பவில்லை. தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூவ் ஹக்கீம் அரசியல் சீன் இல் இருந்திருக்க மாட்டார் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான  ஏ.எல்.எம் .அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய ‘நான் எய்த அம்புகள்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(11)  முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5 மணி வரை இடம்பெற்ற வேளை  பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

முஸ்லிம்களின் பிரச்சினைகளை அரசியில் மயபடுத்த தான் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். அதனால் எழ போகும் பிரச்சினைகளை அறிந்த அவர் அப்போதே கட்சியின் பெயரை தேசிய ஐக்கிய முன்னணி என மாற்றினார்.

ரவூவ் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக வந்த பின்னர் ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்களுக்கு என்று ஒரு கோமண துண்டை விட்டு சென்றிருக்கிறார் அதை கொண்டு அம்மணத்தை மறைப்பதா தலைப்பாகை கட்டுவதா என்று கேள்வியெழுப்பினார் அந்த இடத்தில் அவர்  தெரிவித்த கருத்தே நான் கட்சியில் இருந்து விலகி செல்ல காரணம். எனினும்  முஸ்லிம்களை தலைவர் அஷ்ரப் கோமண துண்டுடன் அனுப்பவில்லை. தலைவர் உயிருடன் இருந்திருந்தால் ரவூவ் ஹக்கீம் அரசியல் சீன் இல் இருந்திருக்க மாட்டார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

  பல உயிர்த்தியாகங்களுக்கான அன்று  அவருக்கு  பாராளுமன்ற பிரதிநிதித்துவமே கண்டியிலே  வழங்கப்பட்டது.இழப்புகளை கொடுத்து வாங்கிக்கொண்டாரே தவிர  12 அரை வீதத்திலிருந்து 5 வீதமாக குறைந்ததற்காக  ஒரு நாளும் ஒரு ஆசனத்தை கூட பெறவில்லை.  இப்போது இங்கு  வந்துவிட்டு எமக்கு அவர்  அரசியலில் டூப் விடக்கூடாது என கூற விரும்புகின்றேன்.

இதனால்தான் அஷ்ரப் சந்திரிக்காவோடும்  வெற்றிலையோடும் கதிரையோடும் சேர்ந்து முஸ்லிம்களை களமிறக்கி முஸ்லிம்களை காப்பாற்றினார் ஆனால் இன்று பயங்கரவாதிகள் என்ற பெயரோடு நிற்கின்றோம்.நாங்கள் மகிந்த ராஜபக்சவை ஆதரித்த பொழுதெல்லாம் அவர் சனாதிபதியாக இருந்த பொழுது வடகிழக்கு மக்களுக்கு வரலாற்று ரீதியாக செய்த நன்மை நாட்டுக்கு செய்த நன்மை பற்றி பேசும் சிலர் பொழுது சஜித் ரணிலை போன்ற இஸ்லாமியர் இல்லை என்னும் அளவிற்கு பேசியிருக்கிறார்கள். அதாவது மகிந்த கோட்டாபயவிற்கு வாக்கு போடும் முஸ்லிம்கள் இஸ்லாமியர்களே அல்ல எனும் அளவிற்கு பேசியிருக்கிறார்கள்.
 
எங்களுடைய பார்வையில் சஜித் பிரேமதாஸ வென்றிருந்தால் கிழக்கு மாகாணம் அமெரிக்காவிற்கு சொந்தமாக மாறியிருக்கும் இப்பொழுதும் நடுவில் ஆடிக்கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியும் சஜித் பிரேமதாஸவும் இப்படி மோசமாக தோற்றுப்போவார்கள் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.2019 ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச சில பள்ளிவாசலுக்கு சென்ற வேளை  அவரை வைத்து கொண்டு அல்லாஹ் கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க வேண்டும் என கேட்க முடியாது  அதற்காக என்ன ஓதினார்கள் அல்லாஹ் எங்களுக்கு நல்ல தலைவனை காட்டு என்று இப்போதுதான் இறைவனுக்கு முறையாக கேட்டிருக்கிறது.

2015 ம் ஆண்டு மகிந்தவை தோற்கடிக்க வேண்டிக்கொண்டார்கள் அதன் பலனை மைத்திரிபால சிறிசேன வந்த பிறகு முஸ்லிம் என்றால் பயங்கரவாதிகள் என்று எல்லா இடமும் அடித்து விரட்டினார்கள். இறுதியில் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டோம்.
முஸ்லிம் காங்கிரஸ் என்னுடைய கட்சி  வாப்பா மாரின் கட்சியல்ல . நாங்கள் இரத்தம் சிந்தி வளர்த்த கட்சி. கட்சியை விட்டு வெளியேறி விட்டால் பைத்திய காரன் என்றா எண்ணிவிட்டார்கள்.

இன்று முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்று  பேசுகிறார்கள் . நாம் தான் வாக்களித்த ஹரீஸ், மன்சூர் போன்றவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறோம் .அவர்கள் தான் அந்த பிரச்சினையை பார்க்க வேண்டும்.மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சிங்களவர்களுக்கும்  தமிழர்களுக்கும் பாலமாக இருந்தார் இப்போது முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையே பாலம் ஒன்றை தேடி திரிகின்றோம் .  இன்று முஸ்லிம் மக்களுக்கும் , தமிழ் மக்களுக்கும்,  சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே துருப்பிடிக்காத பாலம் ஒன்று தேவைப்படுகிறது.

சமஷ்டிமுறையை வேண்டாம் என்பதற்கு காரணம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களை காப்பாற்றுவதற்கே. ஏனெனில் வடக்கு கிழக்கில் 3 இல் ஒரு பங்கு முஸ்லிம்களே வாழுகின்றனர் வடகிழக்கிற்கு வெளியே மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களும் வாழ்கின்றமையாலே சமஷ்டியை வேண்டாம் என்கின்றோம்.

 அவ்வாறே தான்  முனை மருதவன்  சகோதரன் எம்.எச்.எம்.இப்ராஹிம் உண்மைக்கு உண்மையான ஒரு அரசியல் விமர்சகன். அவரின் ‘நான் எய்த அம்புகள்’குறி தவறாமல் எய்தபட்டதை அண்மைக்காலமாக அவரின் அரசியல் விமர்சனங்களை பார்க்கும்போது எனக்கு புரிந்தது.அவரின் நவீன காலத்து அரசியல் பார்வை மற்றும் விமர்சனங்களில் உண்மையும், நேர்மையும் , தெளிவும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.வெறுமனே ஒரு பிராந்திய அரசியல் விமர்சகன் என்றில்லாமல் அவரின் தேசிய அரசியல் பார்வையின் ஆழம் எமது சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும் , நாட்டு பற்றையும் அவர் எய்த அம்புகள் குறி தவறாமல் இலக்கை அடைந்துள்ளது.சமூகத்தையும் , நாட்டையும் நேசிக்கும் ஒரு உண்மை அரசியல் விமர்சகனின் அம்புகள் அந்த இலக்கை பூரணமாக சென்றடைந்துள்ளதானது நிச்சயமாக சமூகத்தையும் நாட்டையும் கடந்த காலங்களில் விழிப்படைய செய்தது போல் இனிமேலும் அப்பணி தொடர வேண்டியதும் சமூக கடமையாக இருப்பதால் இ அதற்காக பிரார்த்திக்கின்றேன்.இவ்வாறானவர்களே இன்றைய காலத்தின் தேவையுமாக இருப்பவர்கள் என குறிப்பிட்டார்.

Related posts