தாயகஉறவுகளின் பசியைப்போக்க தனது பிறந்த நாள்பரிசாக 10லட்சருபாவை வழங்கிய பரோபகாரி!

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட தாயகஉறவுகளின் பசியைப்போக்க தனது பிறந்த நாள்பரிசாக 10லட்சருபாவை வழங்கியுள்ளார் ஒரு  பரோபகாரி. அவர்தான் இலங்கை    யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த கனடாவில் வாழ்ந்துவரும் மனோகரன் சுப்பிரமணியம் என்பார்.
 
குறிப்பாக அவர்வழங்கிய 1மில்லியன் ருபா(10லட்சருபா) நிதியைஅம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த 500குடும்பங்களுக்கு தலா 2000ருபா வீதம் 500 உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிஉதவுமாறு மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
 
அதற்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய திருக்கோவில் பெருநிலப்பரப்பில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த ஒரு தொகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் நேற்று  வழங்கப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் விடுத்தவேண்டுகோளையேற்று பிரபல சமுகசெயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் இந்நிவாரணத்தை வழங்கிவைத்தார்.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மண்டானை காயத்திரிகிராமம் குடிநிலம் வினாயகபுரம் பாலக்குடா திருக்கோவில் ஆகிய   கிராம மக்களுக்கென உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் 200 உலருணவுப் பொதிகளை நேற்று   வழங்கிவைத்தார்.
 
நிகழ்வில் உதவிபிரதேச செயலாளர் க.சதீஸ் சமுகசெயற்பாட்டாளர்  வி.ரி.சகாதேவராஜா உதவிதிட்டமிடல் பணிப்பாளர் செல்வி எம்.அனோஜா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
 
பயனாளிகள் கருத்துரைக்கையில் கனடாவில் வதியும் மனோகரன் சுப்பிரமணியத்திற்கு நீண்டஆயுள்கிடைக்கவேண்டுமென பிறந்தநாள்  வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கின்றஅதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று  கூறினர்.
 
எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்குவந்து இவ்வுதவியை எமக்கு வழங்கிவைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்என பிரதேசசெயலாளர் கஜேந்திரன்  அங்கு நன்றிகூறினார்.

Related posts