துறைநீலாவணையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

துறைநீலாவணை மத்திய விளையாட்டுக்கழகத்தின் சிறந்த விளையாட்டு வீரரும்,உறுப்பினருமான அமரர் யோகராசா -கௌதமனின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி துறைநீலாவணையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று சனிக்கிழமை (26)இடம்பெற்றது.

துறைநீலாவணை நண்பர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு ஒரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையில் காலை 8.30 மணியளவில் ஆரபித்து வைக்கப்பட்டது.இரத்ததான நிகழ்வு 1.30 மணிவரையும் இடம்பெற்றது.

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.ஆர்.சில்வா இவாஞ்சனா தலைமையிலான குழுவினர் மற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி குழுவினர்கள்

துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலைக்கு இன்றையதினம் வருகைதந்து அமரர் யோகராசா கௌதமனின் நண்பர்களினால் தானம்செய்யப்பட்ட  இரத்தக்கொடையை சேகரித்து வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள்.இரத்தான நிகழ்வில் ,துறைநீலாவணை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.ரீ.ஹரீட்,துறைநீலாவணை மத்திய விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் சண்முகம் அரங்கநாதன்,ஓய்வுநிலை ஆசிரியர் சா.ஆசைத்தம்பி,தாதி உத்தியோகஸ்தர்கள்,பொது சுகாதார பரிசோதகர்,வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்கள் கலந்துகொண்டதுடன் 

100 மேற்பட்ட நண்பர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு உதிரம் கொடுத்து உதவினார்கள்.

Related posts