துறைநீலாவணையை சூழவுள்ள விவசாயக்குளங்களில் வீட்டுக்கழிவுகள் – பிரதேசசபை அகற்றுவதற்கானநடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

துறைநீலாவணையை சூழவுள்ள விவசாயக்குளங்களில் வீட்டுக்கழிவுகள் வீசப்படுவதாக விவசாயிகள்இமற்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.இதனை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

 

 துறைநீலாவணையை சூழவுள்ள விவசாயக்குளங்களில் பொதுமக்கள் சிலர் தங்களின் வீட்டுக்கழிவுகளை சூட்சுமமான முறையில் குளங்களில் கொட்டி வருகின்றார்கள்.குறிப்பாக கரைச்சாக்குளம்இகுமாரப்போடியார் குளம்இஆழ்வாங்குளம் போன்ற குளங்களிலே தங்களின் வீடுகளில் சேமிக்கப்படும் கழிவுப்பொருட்களை அத்துமீறி வீசுகின்றார்கள்.

 

மேற்படி குளங்களில் மழைநீரையையும்இஏற்று நீர்ப்பாசனத்தையும் நம்பி விவசாயத்தை செய்து வருகின்றார்கள்.இவ்வாறு குளத்துநீரை பயப்படுத்தி 320 ஏக்கர் வேளாண்மை செய்கை பண்ணப்படுகின்றது.வீடுகளில் சேமிக்கப்படும் இலத்திரனியல் கழிவுகள்இபிளாஸ்ரிக் பொருட்கள்இசமையல்கழிவுகள்இஉடைந்த போத்தல்கள்இபாவித்த பொருட்கள்இமரம் செடி கொடிகளின் கழிவுகள்இஉட்பட சுமார் 100க்கு மேற்பட்ட கழிவுப்பொருட்களை வீசி வருகின்றார்கள்.

 

இவ்வாறு மேற்படி குளங்களில் கொட்டுவதால் விவசாயக்குளங்களில் பொதுமகள்இவிவசாயிகள்இ விளையாட்டு வீரர்கள் நடமாடமுடியாத நிலையிலும்இசுற்றுச்சுழல் பாதிப்படையும் நிலையில் பல அசௌரியங்களை முகம்கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றார்கள்.இவ்வாறு குளங்களில் அத்துமீறி குளங்களில் கழிவுப்பொருட்களை வீசுவதை தவிர்க்குமாறு விவசாயிகள் கோரிக்கை முன்வைப்பதோடு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts