தொகைமதிப்பு ஓவியர் போட்டி – 2021

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இலங்கையில் நிறுவப்பட்டு 150 ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாகவும் குடிசன வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2021 விழிப்புணர்விற்காகவும் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான தொகைமதிப்பு ஓவியர் போட்டி – 2021 ஒன்றினை நடத்தி இருந்தது.
 
 
இவ் ஓவியப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் கனிஸ்ட பிரிவில்; 04 ஆம் இடத்தை பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஏறாவூர் அரபா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம். ருசைத் மற்றும் சிரேஸ்ட பிரிவில் ஆறுதல் பரிசை பெற்றுக் கொண்ட பட்டிருப்பு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் கே .கஜனூரன் ஆகிய இருவருக்கும் மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மாவட்ட புள்ளிவிபர உத்தியோகத்தர் த. ஜெய்தனனின் ஏற்பாட்டில் இன்று மாவட் செயலகத்தில் அவர்களுக்கான பரிசில்களும் கௌரவிப்பும் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் ஆகியோரால் வழங்கப்பட்டது.
 
 
இந் நிகழ்விலகாணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே. தயாபரன் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்  ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி. எம்.எஸ்.நிஹாறா மௌஜூத்   ஷேரி நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் தர்சன் மற்றும் மாவட்ட புள்ளிவிபரப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
இவ் வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்குமான கல்வியினை தொடர்ச்சியாக தொடர்வதற்கு தேவையான நிதி உதவியினை ஷேரி நிறுவனம் வழங்க உள்ளது.

Related posts