நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டு அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெற உள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் இடம்பெறும்.

இதையடுத்து புதிய நாடாளுமன்ற அமர்வு மே மாதம் 14ம் திகதி இடம்பெற உள்ளது.

Related posts