நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்!

நாட்டில் கொவிட் தொற்றினால் ஒன்றரைவருட காலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் சுமார் 50வீதமான பாடசாலைகள் நாளை(21)வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படவிருக்கின்றன.இதற்கென கல்வியமைச்சும் சுகாதாரஅமைச்சும் இணைந்து பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துவருகிறது.
 
‘பன்டமிக்’ (Pandemic)எனப்படும் சர்வதேச வியாதியான  கொரோனாவைரஸ்  அன்று உலகை மிகமோசமாக உலுக்கியது.அதற்கு எமதுநாடும் விதிவிலக்கல்ல. அது கல்வி சமுகபொருளாதார சகல துறைகளையும் வெகுவாகப்பாதித்திருந்தது. மனிதர்கள் இயல்பாகவே வறுமைக்கு ஈர்க்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
 
இன்று ஓரளவு தணிந்துவருவதை அவதானிக்கமுடிகிறது.
இக்கொடிய கொரோனாவால் உலகில் 212நாடுகளில் சுமார் 160கோடி மாணவர்கள் அன்று பாடசாலைக்குச் செல்லமுடியவில்லை. அவர்களது கல்வி வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது
 
அதுபோல இலங்கையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தொகை 45 இலட்சம்.   உயர்கல்வி பயிலும் மாணவர்கள் (தேசிய பல்கலைக்கழகங்களில்) 90000 பேர். இவர்களைவிட தனியார் உயர்கல்வி பயிலும் மாணவர் தொகையும் இவ்வாறே பல ஆயிரக்கணக்கில் உள்ளது. உலக மாணவர்கள் தொகையில் 91 சதவீத மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ‘யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது. . சூம் கல்விதான் எமது கல்விமுறை என்று சொல்லுமளவிற்கு நிலைமை மோசமாகச்சென்றிருந்தது.
 
கொரோனா முடிந்த பிற்பாடு உலகில் சுமார் 97லட்சம் மாணவர்கள் பூரணமாகவே பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிடுவார்கள் என்று உலகளாவிய ‘சேவ் த சில்றன்’ (Save the children) அமைப்பு ஆய்வின்மூலம்  வெளிப்படுத்தியிருக்கிறது.
இடைவிலகல் (Dropout) என்பது சர்வசாதாரணமாக இருக்கப்போகின்றது. அதனால் அரசாங்கங்கள் பல மாற்று உபாயங்களை கையாளவேண்டிய கட்டாயம் நிலவும்.கல்விக்காக அரசாங்கம் செலவுசெய்யும் பணம் குறையும். பாதுகாப்புக்கு கல்விக்கு அரசாங்கம் இதுவரை ஒதுக்கிவந்த பணத்தொகை குறைந்து, சுகாதாரத்துறைக்கு அதிகம் ஒதுக்கவேண்டிவந்துள்ளது.
 
உலகளாவிய கல்வி முறையில் சொல்லப்பட்ட கட்டாயக் கல்வி (Compulsory Education) போய், இன்று கோடிக்கணக்கான பிள்ளைகள் கட்டாயமாக வீட்டிலிருக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. வறியவர், செல்வந்தர், நகரம்,கிராமம் என்ற வேறுபாடின்றி சகலரும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில் இன்று இணையவழிக்கல்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில் நிகழ்நிலைகல்வி (Online Education)முக்கியத்துவம்பெறுகிறது. அதுவே மற்றுமொரு ரியுசன் வர்த்தகமாக மாறிவருவதையும் இவ்வண் சுட்டலாம்.
உலகப் பொருளாதாரத்தளம்எனும் அமைப்பு கொரோனா நோயின் தாக்கம் பற்றி மூன்று கருத்துக்களைக் கூறுகின்றது.
 
1) கொரோனா நோயானது உலகெங்கும் வாழும் பிள்ளைகள் கல்விபெறும் முறையை மாற்றியமைத்துள்ளது.
2) கல்வி தொடர்பான புதிய தீர்வுகள்இ தேவையான புத்தாக்கங்களைக் கொண்டு வரும்
3) உலகில் நிலவும் ‘எண்ம இடைவெளி’ யானதுஇனுபைவையட ஊயி – (கணினி அறிவில் மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு) கல்வி தொடர்பான புதிய அணுகுமுறைகள் கல்வித் துறையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் விரிவடையச் செய்யும் என்பதாகும்.
செல்வந்த நாடுகளுக்கு அப்பால் இலங்கைஇ இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும் இணையவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கல்வியின் பயன்கள், இணையவழி வசதியற்றவர்களைச் சென்றடைவதற்கில்லை.
 இதன் காரணமாக வசதிகளைப் பெற்றுள்ள வர்களே பயனடைவர். பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் நிதி வசதியற்றவர்களும் கல்வியில் பின்னடைவைக்காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாணவர்கள் நூல் நிலையங்களையும் ஏனைய கற்றல் சாதனங்களையும் கொண்ட கல்வி நிறுவனங்களிலிருந்து அகன்று தொலை தூரம் சென்றுவிட்டனர் என எனது முதுகல்விமாணித்துறை ஆசான் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் மேலும் குறிப்பிடுகின்றார்.
 
எனினும் இணையவழிக்கல்வி போதுமான பலனை அளிக்கவில்லை. மாணவர்களின் கல்வியில் போதுமான தாக்கத்தைச்செலுத்தவில்லை. வகுப்பறைக்கல்விக்குபின்பேதான் எதுவும் என பல பெற்றோர்கள் கருத்துரைத்திருந்தனர்.
கடந்த இருவருடங்களில் பாடசாலையைக்காணாது அல்லது வகுப்பறைக்கல்வியை தொடர்ச்சியாக முறைப்படி கற்காத பலலட்சமாணவர்கள் அடுத்தவருடம் இரண்டு வகுப்புகளைத்தாண்டி அடுத்தபடிநிலைக்குச்செல்லவிருக்கிறார்கள். கடந்த இருவருடங்களில் கற்கவேண்டிய பாடங்கள் அரைகுறையாக கற்பிக்கப்பட்டநிலையில் இவர்கள் புதிய படிநிலையில் கால்வைக்கிறார்கள். இன்னும் பலர் முன்பள்ளிக்கல்வியை கற்காமலே முதலாம்வகுப்பில் காலடி எடுத்துவைக்கிறார்கள்.
 
இம்முறை க.பொ.த சா.த மற்றும் உயர்தரம் எழுதும் மாணவர்கள் பாடசாலையில் முறைப்படி கற்காமல் கொரோனாப்பீதி நெருக்கடிக்குமத்தியில் சூம் இணையம் போன்ற தொழினுட்பங்களில் படித்தவர்கள். இவர்கள் அவர்களது வசந்தகாலமான பாடசாலைக்காலத்தை இழந்திருக்கிறார்கள். இவர்களது பரீட்சை பெறுபேறுகள் பாடசாலையின் இருப்பைத் தீர்மானிக்கலாம்.
 
ஏனெனில் கடந்த மாதம் வெளியான 2020க.பொ.த.சா.தர பெறுபேறுகள் பரவலாக சிறப்பாக இருந்தன. இவர்கள் பாடசாலைப்பக்கமே செல்லாமல் சூம் மூலம் கற்று பரீட்சைக்குத் தோற்றியவர்களாவர். உதாரணமாக கல்முனை பற்றிமா தேசியபாடசாலையில் வரலாற்றில் 32மாணவர்கள் அதிகூடிய 9ஏ சித்திபெற்றவர்களாவர். எனின் பாடசாலையின் அவசியம் எத்துணை இந்த மாணவர்க்கு தேவையாகவிருந்தன என்பதனை சிலாகிக்கமுடியும். பற்றிமாவைப்பொறுத்தவரை அங்குள்ள ஆசிரியர்கள் சூம் மூலமாக தொடர் கற்பித்தலை அதிபர் சகோ.சந்தியாகுவின் அறிவுறுத்தலில் மேற்கொண்டவர்கள். எனவே ஆசிரியர்களின் வகிபாகத்தை மறுக்கமுடியாது.
 
இலங்கையில் கொடிய கொரோனா தீநுண்மியின் தாக்கம் காரணமாக கடந்தவருடம்(2020)மார்ச் மாதம் 13ஆம் திகதி பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகள் இழுத்துமூடப்பட்டன.
மார்ச் 13இல் மூடப்பட்ட பாடசாலைகள் சுமார் மூன்றரைமாதவிடுமுறைக்குப்பின்னர்  ஜூன்மாதம் 27ஆம் திகதி திறக்கப்பட்டு மாணவர்களை 6ஆம் திகதி பகுதியாக  உள்ளீர்த்தது. அப்படி ஆரம்பித்து பாடசாலைகள் ஒரு வாரத்துள்  யூலை 13ஆம் திகதி திங்களன்று மீண்டும் மூடப்பட்டன.
 
பின்பு அதேமாதம் 17ஆம் திகதி திறக்கப்பட்டு பகுதியளவில் நடைபெற்றுவந்தன. இறுதியாக நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நீண்ட கொரோனா விடுமுறையின் பின்னர் கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம்  10ஆம் திகதி  ஒரேதடவையில் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் பாடசாலைகளின் மாணவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு வகுப்புரீதியாக வாரநாட்களில் பாடசாலை மட்டுப்படுத்தப்பட்டளவில் ஆரம்பமானது.
 
இவ்வாறாக அடிக்கடி மூடப்பட்டு திறக்கப்பட்டு கடந்த இருவருடகாலப்பகுதியில் ஒன்றரைவருடங்கள்  பாடசாலைக்கல்வி பாதிக்கப்பட்டது.அதனால் கல்வி இழக்கப்பட்டிருக்கின்றது. அந்த இழந்தகல்வியை மீட்க இன்று கல்வியமைச்சும் அரசாங்கமும் பலமுயற்சிகளை முன்னெடுத்துபோராடிவருகின்றது. அவர்களுடன் இணைந்து கல்விச்சமுகம் ஒத்துழைக்கவேண்டுமென்பதே இன்றைய தேவையாகும்.
ஏலவே கொரோனா 1ஆம் 2ஆம் அலைகளின் பின்னர் பாடசாலைகளை சுகாதாரமுறைப்படி திறந்த அனுபவம் அனைவருக்குமிருக்கிறது. எனவே இந்த தடவை இலகுவாகவிருக்கும்.
ஆம் ,உலகின் சகலபாகங்களிலும் வியாபித்திருக்கின்ற கொரோனா வைரஸ் தீநுண்மி இன்று எம்மைவிட்டு படிப்படியாக விலகுவதாக தெரிகிறது.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல சிலநாடுகளில் மீண்டும் வேறுவடிவத்தில் அது தலைதூக்கிவருவதையும் இவ்வண் குறிப்பிடாமலிருக்கமுடியாது.எனவேஅது நிரந்தரமாக எம்முடன் தொடர்ச்சியாக பயணிக்கப்போகின்றது.எனவே அதற்கேற்ப நாம் வாழப்பழகிக்கொள்ளவேண்டும் அதாவது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளவேண்டும்.
தெரிந்தோ தெரியாலோ தடிமன் காய்ச்சல் போன்று கொரோனாவும் எம்முடன் தொடர்ந்து பயணிக்கப்போகின்றது என்ற செய்தியை அத்தீநுண்மி சொல்லாமல்சொல்கிறது. 
 
சூறாவளி சுனாமி பெருவெள்ளம் போன்றவற்றுக்கு  எவ்வாறு இந்தோனேசியா யப்பான் போன்ற நாடுகள் தமது வாழ்க்கைக்கோலத்தை மாற்றிக்கொண்டு  பயணிக்கிறதோ அவ்வாறு நாமும் கொரோனாவுக்கேற்ப வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு பயணிக்கவேண்டியதன்அவசியத்தை எடுத்தியம்பிக்கொண்டிருக்கிறது.
கொரோனா என்றால் முழுநாட்டையும் மூடுவது பரீட்சைகளை நிறுத்துவது கற்றலை போக்குவரத்தை முற்றாக நிறுத்துவது என்பதை விட அதற்கு மாற்று உபாயங்களைக்கையாண்டு வாழமுற்படவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. அதற்காக புத்திஜீவிகள் கல்வியியலாளர்கள் சிந்திக்கவேண்டிய காலகட்டம் வந்துள்ளது.
 
நாளை பாடசாலை திறப்பு!
எதுவொன்று மறுக்கப்படுகின்றதோ மறைக்கப்படுகின்றதோ தாமதிக்கப்படுகின்றதோ அதனை அடைவதற்கான ஆசை ஆர்வம் விருப்பம் அதிகமாகவிருக்கும். அதற்கமைய பலமாதங்களாக மறுக்கப்பட்ட பாடசாலைக்கல்வியைப்பெறுவதில் மாணவர்களுக்கு தற்போது நிறைய ஆர்வமுள்ளது. ஆசிரியர்களும் அதிபர்களும் வீட்டிலிருந்து சலித்துவிட்டார்கள். தங்களது வேதனம் தக்கவேண்டும். கற்pப்த்துவிட்டு அதற்கான ஊதியத்தை பெறவேண்டம் என்ற சிந்தனை பலரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை பாடசாலை ஆரம்பமாவதை பலதரப்பினரும் ஆவலோடு வரவேற்கின்றார்கள். இதேவேளை ஆசிரியர்கள் அதிபர்களின் தொழிற்சங்கப்போராட்டம் 99நாட்களின்பின் நிறைவுக்கு வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதான். உலகில் ஆசிரியர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் வழங்குகின்ற நாடாக இலங்கைஇருப்பதைக்குறிப்பிடலாம்.
ஒருநாடடின் கல்வித்தரம் என்பது அங்குள்ள ஆசிரியர்களின் தரத்தை விஞ்சாது என்று கல்யியிலாளர் கூறுவர். எனவே எழுத்தறிவிக்கும் அவர்களது வேதனத்தை உயர்த்தவேண்டியதவசியமாகும். அதனைவிட கடந்த 28வருடகாலமாக சம்பளமுரண்பாடு காரணமாக வழங்கப்படாதிருக்கும் நிலுவையை வழங்கவேண்யதும் அவசியமாகும்.அதில் மாற்றுகருத்துக்கிடமில்லை. அதனை உண்மையிலே ஆசிரியர்க்காக மாணவர்களுக்காக செயற்படும் உயிர்ப்புள்ள தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பேசித்தீர்த்துகொண்டுள்ளதில் கல்விப்புலம் மகிழ்வடைகிறது.
நாட்டிலுள்ள பாடசாலைகளில் 200மாணவர்களைவிட குறைவான எண்ணிக்கையுடைய ஆரம்பநெறி மாணவர்களுள்ள 5000 பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றன.
 
அதற்கான பூர்வாங்கஏற்பாடுகள் கடந்த (18)திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன. கொவிட்தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள் துண்டுப்பிரசுரங்கள் செய்திக்குறிப்புகள் அனைத்து மாகாணத்திலுள்ள சகல வலயங்களுக்கும் கையளிக்கப்பட்டுளன.
இன்;று(20)பாடசாலைதிறப்பது தொடர்பான பொது அறிவித்தல் அந்தந்த கோட்டவாரியாக பொதுஇடங்களில் ஒலிபரப்பப்படவுள்ளது.இவ்வாரம் பாடசாலைகளை சுத்தப்படுத்தல் உள்ளிட்ட தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுhராள்ளன.
 
முதலிருவாரங்களில் …
முதலிருவாரங்களில் மாணவர்களுக்கு சுதந்திரமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கேற்றவிதமாக  எவ்வித அழுத்தங்களுமின்றி கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.கற்பித்தல் என்று பெரிதாக எதுவும் இடம்பெறாதவகையில் ஏனைய புறக்கிருத்தியசெயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மாணவர் அனுமதிக்கப்படுவர்.
அதேவேளை இஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சியளிப்பதற்கான வளவார்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர்கள் இந்தவாரத்தில் ஆரம்பநெறி ஆசிரியர்களுக்கு மாணவர்களை கொவிட் நெருக்கடியிலிருந்து கற்றல்நிலைமைக்கு திருப்புவதற்கான பயிற்சியளிப்பார்கள்.
பாடசாலைகள்நாளை 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காக போதுமான நிதிஉதவியும் வழங்கப்பட்டுள்ளது.
 
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு சீருடை அவசியமில்லை எனவும்சாதாரண உடையில் சமூகமளிக்க முடியும்.
மேலும் மாணவர்களின் உடல் வெப்பநிலையினை அறிவதற்கு உடல் வெப்பமானியும் இதன்போது பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்படும் பாடசாலை தொடர்ந்து மூடாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஒத்துழைப்புடன் பாடசாலையினை முற்று முழுதாக சிரமதானம் செய்து சிறந்த முறையில் பாடசாலையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது..
 
இதேவேளை ஆசிரியர்கள் தொழிற்சங்கப்போராட்டம் என்று ஏதாவது அதிபர் ஆசிரியர் சமுகமளிப்பின்மை இடம்பெற்றால் அதளை எதிர்கொள்ளுமுகமாக பிரதேசசெயலகங்களிலுள்ள அபிவிருத்திஉத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருக்கிறது..
 
இதேவேளை  நாளை  21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அன்றைய தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த கூட்டணி அறிவித்தது.
 
இதன்படி நாயை 21 மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
வருகின்ற 25ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுஇவ்வாறிருக்க  நாளை  21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அரசா ங்கத்தினால் நியமனம் வழங்கப்பட்ட 60000 பட்டதா ரிகள் ஆசிரியர் சேவை யில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
 
கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில இழக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு  அரசாங்கம் சிறந்த தீர்வை வழங்கியுள்ளது அதிபர் – ஆசிரியர்களின் பிரச்சினைக்கு இதிலும்பார்க்க நிவாரணத்தை வழங்க முடியாது என்று அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பளப் பிரச்சினை 24 வருடங்களாக தொடர்கிறது. அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான பதிலை வழங்கும் இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்கங்கள் அதற்கு இணங்காமை வருத்தம் அளிக்கும் விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
உலகநாடுகளும் படிப்படியாக தமது முடக்கநிலையை தளர்த்தி பாடசாலைகள் தொடக்கம் சகல நடவடிக்கைகளையும் சுகாதாரமுறைப்படி மீண்டும் ஆரம்பித்துவருகின்ற நிலையில் இலங்கைத்திருநாட்டில் நாளை பாடசாலைகள் ஆரம்பமாகின்றன என்ற செய்தி சகலமட்டங்களிலும் வரவேற்பைப்பெற்றுள்ளது எனலாம்.
 
வி.ரி.சகாதேவராஜா
உதவிக்கல்விப்பணிப்பாளர் சம்மாந்துறை

Related posts