நிதியமைச்சின் சமூக நலன்புரி நன்மைகள் சபை குறித்து விளக்கம்

நிதியமைச்சின் சமூக பாதுகாப்பு வலையமைப்புச் செயற்றிட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலன்புரி நன்மைகள் சபையின் செயற்பாடுகள் நடைமுறைகள் தொடர்பில் மாகாண மட்டத்தில் விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தபடவுள்ள பொது மக்களுக்கான நிதியுதவிகள் வழங்கும் திட்டங்கள் யாவும் இலத்திரனியல் வலையமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வகையில் இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே இச் செயலமர்வு நடத்தப்பட்டது.

இதில், நிதியமைச்சின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் ஜனக நாணயக்கார, நிரஞ்சன் அனுராத, ஐ.ஆர்.என்சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், வளவாளர்கள் பலரும் பங்கு கொண்டு கலந்து கொண்டவர்களுக்கு விளக்கங்களை வழங்கினர்.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் பொது மக்கள் தொடர்பான சமுர்த்தி, மற்றும் கடன், நிதி பெறல் செயற்பாடுகளை இலகுவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெறும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts