நெற் செய்கையின்போது களை கட்டுப்பாடு தொடர்பான விளக்கமும் நிலக்கடலை அறுவடையும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றான பன்றி நெல் பிரச்சினை தொடர்பான ஒருங்கிணைந்த அறிவூட்டல்  நிகழ்வும் உதயம் விதையுற்பத்தியாளர் சங்கத்தின் நிலக்கடலை அறுவடை நிகழ்வும் கரடியனாறு தரப்பிலாவெளி கண்டத்தில் இன்று நடைபெற்றது. 

 கித்துள் பகுதி விவசாய போதனாசிரியர் வி. இளமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி. பேரின்பராஜா  உதவி விவசாய பணிப்பாளர் எஸ். சித்திரவேல், விவசாய போதனாசிரியர்களான ஞா.சுதர்சனா, தினேஸ்காந், லிங்கேஸ்வரன், சிபான், கலைமோகன் விவசாய தொழில்நுட்ப உதவியாளர்  தேவரூபன் மற்றும் விவசாயிகள்  போன்றோர் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையில் பன்றி நெல் எனப்படும் நெற்களை எனும் களை பரவல் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. 

இது தொடர்பில் கிழக்கு பல்கலைக் கழகத்தினால் மட்டக்களப்பு விவசாய விரிவாக்கத் திணைக்களத்திற்கு  வழங்கப்பட ஒன்றிணைந்த தொழில்நுட்ப ஆலோசனையைக் கொண்டு மாவட்டத்தில் பத்து முன்மாதிரி துண்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  

இச்செய்முறையை  பின்பற்றியதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாக இங்கு வருகைதந்த விவசாயிகள் தெரிவித்தனர். 

Related posts