நேற்று காரைதீவில் மீண்டும் அன்ரிஜன் :அனைத்தும் நெகடிவ்.!

காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட  பிரதேசங்களில்  நேற்று மீண்டும் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட 56அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்தும் நெகட்டிவ் பெறுபேற்றைத்தந்ததாக காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு மற்றும்  பொது சுகாதார பரிசோதகர் ஜெமீல் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொள்ளப்பட்ட அண்டிஜென் பரிசோதனை அனைத்தும் நெகட்டிவ் பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

 காரைதீவு  பிரதானவீதிப்பிரதேசத்திலும் ஆயுள்வேத வைத்தியசாலை காரியாலய சூழலிலும் இத்தகைய அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ந தந்தை உள்ளிட்ட ஜவருக்கு தொற்று உறுதியாகியிருந்தமை தெரிந்ததே.

Related posts