பட்டதாரிகள் விடயத்தில் பாராமுகமாக நடந்துகொள்கிறது அரசாங்கம்!


வடகிழக்கு உட்பட நாட்டின் பல மாகாணங்களிலும் வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழிலுரிமை கோரி பல போராட்டங்களை நடாத்தியும் இவ் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை.என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலே கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்…
கடந்த அரசின் மூலம் 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட 54000 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம்(2018) குறைந்த அளவிலான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் பட்டதாரிகளது வலுமிக்க போராட்டங்களை வலுவிழக்க செய்வதற்காக உள்வாரிஇ வெளிவாரி எனும் பாகப் பிரிப்பினையை ஏற்படுத்தி பிரித்தாளும் தந்ரோபாயத்தை இவ் அரசு கையாண்டதே தவிர பட்டதாரிகள் நலனில் எள்ளளவேனும் அக்கறை கொள்ளவில்லை.

கடந்த 21.03.2017ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகளால் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அம்பாரை. திருகோணமலைஇ யாழ்பாணம் என அனைத்து மாவட்டங்களிலும் 155 நாட்கள் தொடர்ச்சியானஇ வலுமிக்க போராட்டங்கள் தொழிலுரிமை கோரி நிகழ்த்தப்பட்டதுஇ இந் நிலையில் அரசாங்கமோஇ அரசியல்வாதிகளோ எமது நியாயமான போராட்டத்தில் சிரத்தை கொள்ளவில்லை.

குறிப்பாக கடந்தகால சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமாகிய நிலையில் இரண்டு வரவு செலவு திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் எந்த ஒரு வரவு செலவு திட்டத்திலேயோ பட்டதாரிகளுக்கு தொழில்வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறவில்லை.

நியாயயமாக இடம்பெறும் போராட்டங்களுக்கு தக்க தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய இவ் அரசாங்கம் எமது போராட்டங்களை நலினப்படுத்தி எமது தொழிலுரிமையை மீறும் செயற்பாட்டின் ஒரு அங்கம்தான் எமக்கான தொழில்வழங்கலுக்காக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காது எம்மை புறக்கணித்த செயற்பாடாகும்.

வடக்குஇ கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை பட்டதாரிகளது தொகை அதிகமாகும்இ இவ்விரு மாகாணங்களிலும் ஏற்பட்ட யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து தமது பிந்திய வயதில் பட்டம்பெற்ற 35 வயதிற்க்கு மேற்பட்ட பட்டதாரிகள் அதிகமாகவே உள்ளார்கள்இ அவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை இவ்வரசு கொண்டுவராது பட்டதாரிகளது நலனில் அக்கறையின்றி செயற்படுகிறது.

நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கென வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் இடம்பெறும் நிலையில் பட்டதாரிகளுக்காக நிதி ஒதுக்கி அவர்களுக்கு தொழிலை பெற்றுக்கொடுக்க தவறுவதால் 35 வயதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதிகரிக்க ஒரு காரணமாகும்.

இவ் நல்லாட்சி அரசாங்கம் பட்டதாரிகள் நலனில் அக்கறை இன்றி செயற்படுகின்றது எனினும் எமக்கான மக்கள் பிரதிநிதிகள் என நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய வடஇ கிழக்கு மக்கள் பிரதிநிதிகள்கூட எம் பிரச்சனைபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க தவறுவது வாக்களித்த எம்மை ஏமாற்றும் நரிச்செயற்பாடாகும்.

எமக்கான மக்கள் பிரதிநிதிகள் இன்று அரசுக்கான பங்காளிகளாக மாறிக்கொண்டுஇ பணப்பெட்டிகளுக்கும்இ சொகுசு வாகனங்களுக்கும்இ சொகுசு பங்களாக்களுக்கும் அடிமைகளாகி வரவுசெலவு திட்டத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவென நிதி ஒதுக்காத செயற்பாட்டை எதிர்க்காது வாய்மூடி மௌனிகளாக இருக்கும் செயற்பாடானது படித்த ஒரு சமூகத்தை ஏமாற்றும் செயலாகும்.

பட்டதாரிகளது அவலநிலையை போக்குவதற்காக இவ்வருட வரவு செலவு திட்டத்தில் பட்டதாரிகளுக்கான நிதி ஒதுக்கீடு இடம்பெறவேண்டும்இ அத்தோடு வயது முதிர்ந்த 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமைஇ வழங்கி உள்வாரிஇ வெளாவாரி என்ற பிரிவினையற்று பட்டம் முடித்த வருட அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்குவதற்கு எமது மக்கள் பிரதி நிதிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் படித்த பட்டதாரிகள் சமூகம் எமது மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக போராடவேண்டிய சூழ்நிலையை தடுக்கமுடியாது.

Related posts