பற்றியெரியும் வரை பார்த்துக்கு இருந்துட்டு, இப்போ தண்ணி ஊத்தப் போனா அணையுமா? என்கிறார் பேராசிரியர் இஸ்மாயில்!!

உரிமை கோஷம் எழுப்ப எமக்கும் தெரியும் எமது இளைஞர்கள் நாளை இந் நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் நாம் சாதுவாக செல்வதே சிறப்பு” எனவும் கடந்த ஆட்சியில் அ.இ.ம.கா. எனக்கு தந்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொண்டு  ‘பொறிக்குள் இருந்து பிய்த்து’ எடுக்க வேண்டியது போலதான் அபிவிருத்திகளை கொண்டு வந்தேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தேசிய காங்கிரசின் வேட்பாளருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
 
சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
கடந்த ஆட்சியில் அ.இ.ம.கா. எனக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி. பதவி தந்திருந்த போதிலும் ‘பொறிக்குள் இருந்து பிய்த்து’ எடுக்க வேண்டியது போலதான் அபிவிருத்திகளை இங்கு கொண்டு வந்தேன். இன்று மேடைகளில் என்னை வசைபாடும் இவர்கள் நாணயத்தை பற்றி கதைக்க அருகதையற்றவர்கள். உலமாக்களின் முன்னிலையில் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மழுப்பியவரே அ.இ.ம.கா. தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தான். அதற்குண்டான ஆதரங்களான யாரும் மரணிக்கவில்லை இன்றும் உயிரோடுதான் இருக்கிறார்கள்.
 
இது போக இன்று சிலர் மேடையில் ஏறினால் பஸ் டிப்போ தடுக்கப்பட்டதைப் பற்றி பேசுகின்றனர். அவ்வாறு கூறும் சக கட்சிக் காரரிடம் கேட்கிறேன். “நான் பாராளுமன்றம் சென்று ஒன்றறை வருடங்கள்தான்; அதற்குள் தடுப்பா? அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்த உங்களுக்கு இதை செய்து முடிக்க வக்கில்லை. நொண்டிச் சாட்டு கூறிக் கொண்டு மேடையில் வசைபாடி என்ன பலன்”
 
எது எப்படியோ, மாயக் கல்லி, கரங்கா, வட்டமடு இத்தனையும் இவர்கள் முழு அதிகாரத்தில் இருந்த காலத்தில்தான் நிகழ்ந்தவை ‘பற்றியெரியும் வரை பார்த்துக்கு இருந்துட்டு, இப்போ தண்ணி ஊத்தப் போனா அணையுமா?’இறுதிக் காலத்தில் என்னை எம்.பி.யாக்கி நசுங்கு பொறிக்குள் சுழல வைத்த அசத்திய தலைவருக்கு அவர் நினைத்தது நடக்கவில்லை.
 
இறைவன் எம்மோடு இருக்கின்றான். என்னால் முடியுமான பல கோடி ரூபா அபிவிருத்திகளை கொண்டு வந்துள்ளேன். அவற்றை ‘புரஜெக்டர்’ இல் போட்டுக்காட்ட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.மக்கள் இம் முறை மிகத் தெளிவாக உள்ளனர். தேசிய காங்கிரஸின் தேவையை மக்கள் உண்மையாக உணர்ந்துள்ளனர். மக்களே சிந்தியுங்கள் இனியும் ஏமாற எமது சமூகம் தயாரில்லை – என்றார்.

Related posts