பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி சென்னையைச் சேர்ந்தவர்? சற்றுமுன் வெளியான தகவல்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிநந்தன் சென்னை தாம்பரம் விமானப்படை மையத்தில்தான் பயிற்சி பெற்றார் என்றும் கூறப்படுகின்றது

இந்த தகவலை இந்திய முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் காணாமல் போனார். அவர் இப்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய தரப்பு அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்தால்இ ஐநாவில் கூறி இதுகுறித்து முறையிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தற்போது அபிநந்தன் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

இவரின் முழுப்பெயர் அபிநந்தன் வர்த்தமான். இவர் ஒரு விங் கமாண்டர் தர விமானி. இவரின் சேவை இலக்கம் 27981. இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்ததுள்ளார். 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன்இ என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Related posts