பிரதமரின் முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் வீண் அச்சமடைய வேண்டாம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்அநுராதப்புரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கொரோனா தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் நாம் கலந்துரையாடியுள்ளோம்.

தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்த வேண்டாம். இன்று சிலர் வெளியில் பயணங்கள் செய்வதில்லை. வெளிநாட்டவர் மாகாணங்களுக்கு பயணித்தால் பேரூந்திலிருந்து இறங்கி செல்கின்றனர்.

அதிவேக பாதையிலும் இறங்கி செல்கின்றனர். எனவே இது குறித்து தேவையற்ற பிரசாரங்கள் மற்றும் தேவையற்ற அச்சங்களை விடுப்பதை தவிர்க்ககுமாறு நாம் கோருகின்றோம்

Related posts