பிள்ளையான் மீது பயங்கரவாதச் சட்டத்தை நீக்கு அல்லது விசாரணை செய்யப்படப்பட வேண்டுமென்று வலியுறுத்தி பேரணி

(க. விஜயரெத்தினம்)

பிள்ளையான் மீது பயங்கரவாதச் சட்டத்தை நீக்கு அல்லது விசாரணை செய்யப்படப்பட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் கண்டனப்பேரணி ஒன்று மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை(18)முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் முதலமைச்சரும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 44ஆவது அகவை முன்னிட்டும்,ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையின் சந்தேக நபரான பிள்ளையான் நான்கு வருடங்களாக மட்டக்களப்பு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும்,அவரின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம்(ஜெயம்)தலைமையில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு நகரில் காலை 10.00 மணியளவில்  இடம்பெற்றது.

இவ் கவனயீர்ப்பு பேரணியில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர்,கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கி.சிவநேசன்(வெள்ளையன்),பிரதித்தலைவர் சி.யோகவேள்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொருளாளர் ஏ.தேவராஜ்,வாழைச்சேனை தவிசாளர் திருமதி.சோபா ஜெயராஜ்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

இவ் கவனயீர்ப்பு பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாக நகர்புறத்தை ஊடறுத்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைச் செயலகம் வரை சென்றடைந்தது.”வேண்டும் வேண்டும் பிள்ளையான் வேண்டும்”, கிழக்கை மீட்க பிள்ளையான் வேண்டும்,பிள்ளையானை விடுதலை செய்யப்பட வேண்டும்”, பிள்ளையான் விசாரணை செய்யப்பட வேண்டும்” ,கிழக்கிற்கு எழுச்சி பெற பிள்ளையான் விடுதலை செய்யப்பட வேண்டும்” ,கிழக்கு மக்களின் விடுதலை வீரர் பிள்ளையான் விடுதலைச் செய்யப்பட வேண்டும்” ,பிள்ளையான் சிறையில் இருப்பதால் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகின்றது”,கிழக்கு மண்ணையும்,கிழக்குத் தமிழ்மக்களையும் பாதுகாக்க பிள்ளையான் விடுதலை செய்யப்படவேண்டும்” என்று பிள்ளையான் உருவப்படத்தை சுமந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பேரணியில் கலந்துகொண்டார்கள்.

Related posts