புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் பின்னர் மக்களுக்கான அபிவிருத்தியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துரிதமாக மேற்கொள்ளுவார்

புதிய அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் பின்னர் மக்களுக்கான அபிவிருத்தியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துரிதமாக மேற்கொள்ளுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 4 ஆவது அகவையை முன்னிட்டும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் ஸ்தாபக ஆலோசகர் பஷில் ராஜபக்கஷ ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாமாங்கம் ஆலயம்,மைலம்பாவெளி ஆலயம்,மாவிலங்கதுறை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயங்களில் அமைதியான முறையில் இறை ஆசிகள் வேண்டியும்,கொரோனோ நோய் நாட்டிலிருந்து ஒழியவேண்டியும் எளிமையாக பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மண்முனைப்பற்று அமைப்பாளர் இரா.நடேசபதி,கட்சியின் மண்முனைப்பற்று கிளைச்செயலாளர் எஸ்.ஐங்கரன்,வட்டாரத் தலைவர்களான சண்முகநாதன் ரகுதாஸ்,இரா.குமாரவேல், பூசகர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச அமைப்பாளரும்,வட்டாரத்தலைவர்களும் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் 4ஆவது அகவை தினத்தை முன்னிட்டு கொவிட் 19 சட்டத்திற்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பேணி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசைகள் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்…எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது குறிக்கப்பட்ட 4 ஆண்டுகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது பெரியதொரு வளர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.கட்சியின் பலனை அனுபவிப்பதற்கு கொரோனோ எனும் கொடிய நோயானது இலங்கையை பீடித்திருப்பதால் எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாமல் தடையாக இருக்கின்றது.நிச்சயமாக எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் பெரிய அபிவிருத்திகள் நடக்கும்.

இருபதாவது சீர்திருத்தத்திற்கு ஆதரவு அளித்தவர்கள்  இருக்கின்றார்கள்.எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவுயளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.எமது கட்சிக்கு ஆதரவு அளித்த ஏனைய பங்காளி கட்சிகளுக்கு எமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கமானது சில சலுகைகளை செய்யவேண்டிய நிற்பந்தத்தில் இருக்கின்றது.நுற்றுக்கு 95வீதமான செயற்பாடுகள்  எமது கட்சி வெற்றி கண்டிருக்கின்றது.இதற்கு பிற்பாடு வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கு பின்னர் கௌரவ ஜனாதிபதி சொன்னதுக்கு இணங்க சகல விடயங்களும் நீதி நியாயமான முறையியிலே நடக்கும் என்பதை நான் உத்தரவாதம் அளிக்கின்றேன்.

எமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களில் பலர் முறைப்பாடுகள் இருப்பதாக மக்கள்,பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள்.உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என என்னிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றார்கள்.இது சம்பந்தமாக நாங்கள் மேலிடத்திற்கு நாங்க அறிவித்துள்ளோம்.நிச்சயமாக இனிவரும் காலங்களில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும்,கஸ்டப்பட்டவர்களுக்கும்,தகுதியானவர்களுக்கும் கிடைக்கும் என்பதை நான் உத்தரவாதப் படுத்துக்கின்றேன்.

எங்கட ஜனாதிபதி ஆட்சியிலே கொரானோ என்ற கொடிய நோய் வரவில்லையாகின்  கிழக்கு மாகாணத்தில் பாரிய மாற்றத்தையும்,அபிவிருத்தியையும் நாம் நிச்சயமாக கண்டிருப்போம்.உலகமே இன்று ஆடிப்போய் உள்ள காலகட்டத்தில் நாம் மாற்றமடைய வேண்டிய தேவையுள்ளது.நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வைத்த நம்பிக்கை,பற்றுருதி வீண்போகாது.இனிவரும் காலங்களில் நீதியாக நடைபெறும்.எந்த மோசடியும் இல்லாமல்,எந்தவொரு நிருவாகச்சிக்கல் இல்லாமல் நேர்மையாக இடம்பெறும் என தெரிவித்தார்.

Related posts