புன்னைக்குளத்தில் தும்பை அறுவடை விழா.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பழுகாமம் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட புன்னைக்குளம் கிராமத்தில் தும்பை செய்கையின் அறுவடை விழா இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்றது.
 
பழுகாமம் விவசாய போதனாசிரியர் திருமதி.துஸ்யந்தி ஜதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா பிரதம அதிதியாகவும் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கே.கிரிதரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாவும் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் கமநல அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
 
விவசாய திணைக்களத்தினால் தும்பை செய்கையை விருத்தி செய்யும் நோக்கில் விவசாயிகளுக்கு தும்பை நாற்றுக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வழங்கப்பட்ட நாற்றுக்களிலிருந்து அறுவடையை பெற்றுக்கு கொள்ளும் நிகழ்வின் போது தும்பை செய்கையினால் கிடைக்கும் வருமானம் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் பிரதி விவசாய பணிப்பாளரால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts