புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதென்றால் மாற்று வழியொன்று அவசியம்

அரசாங்கம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்வதாக இருந்தால் கிராமங்களில் இருக்கும் திறமையான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் உள்வாங்க மாற்று வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

5 ஆம் ஆண்டில் இடம்பெற்று வரும் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த பரீட்சையை இரத்து செய்யவேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அதற்கான பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார். புலமைப்பரிசில் பரீட்சை மூலம் மாணவர்களுக்கு தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுக்கின்றனர்.

என்றாலும் புலமைப்பரிசில் பரீட்சை மூலமாக திறமையான கிராம மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அதனால் புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதாக இருந்தால் கிராமங்களில் இருக்கும் திறமையான மாணவர்கள் பிரபல பாடசாலைகளுக்கு செல்லும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டல் கிராம மாணவர்கள் எப்போதும் கிராமத்திலே இருக்கவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

Related posts