பெண்களுக்கு பெண்கள் தினத்திலேயே பாதுகாப்பு இல்லாத

பெண்களுக்கு பெண்கள் தினத்திலேயே பாதுகாப்பு இல்லாத நாடு இலங்கை என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இலங்கை திருநாட்டில் சர்வதேச பெண்கள் தினத்தில் கூட பெண்களுக்கு பாதிகாப்பு இல்லை என்பதை நேற்று மார்ச் 8, சர்வதேச மகளீர் தினத்தில் பதுளை ஹாலி எல தமிழ் 

பாடசாலை மாணவி  உடுவரை பகுதியில் வைத்து வெட்டிக் கொலை செய்த கொடூரச்செயல் நிருபித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதி் தலைவருமான பா.அரியநேத்திரன் இன்று (9)தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று பதுளையில் நடுவீதியில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துக்கூறுகையில்.

பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, சம உரிமை இல்லை, சமந்துவம் இல்லை , சுதந்திரம் என இலங்கையில் சர்வதேச மகளீர் தினத்தில் பல பெண்கள் அமைப்புகள் கருத்துக்களை வெளியிடும் போது இதே தினத்தில் 18 வயதான மாணவி பாடசாலையிலிருந்து உடுவரை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு செல்லும் வலஸ்பெத்தை வீதியில்   தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள செயலானது இலங்கையில் எந்தவகையில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

“நாடும்,தேசமும்,உலகமும் அவளே” என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதே பெண்கள் தினம் சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்பட்டது ஆனால் இலங்கை நாடு அவளே என்பது அவனே என்ற ஆண்மையால் அடக்கப்படுகிறது என்பதே உண்மை.

பெயரளவில் மட்டும் நாடும் தேசமும் உலகமும் அவளே என்ற கோசங்களை முன்வைத்தாலும் “நாடும், தேசமும்,உலகமும்,அவனே” என்ற கருத்தே இலங்கையில் உள்ளதை அனுபவரீதியாக உணரமுடிகிறது.

உண்மையில் ஒரு பாடசாலை மாணவி சர்வதேச மகளீர் தினத்தில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளி தண்டிக்கப்படுவதுடன் இவ்வாறான கொடூரங்கள் இனிமேலும் நடக்காமல் உறுதிப்படுத்தவேண்டும்.

ஒருநாடு ஒருசட்டம் என்று விளப்பரப்படுத்தும் ஆட்சியாளர்கள் ஒரு சர்வதேச பெண்கள் தினத்தில் இடம்பெற்ற ஒரு பெண் மாணவியின் கொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்து நீதி வழங்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

Related posts