போரதீவில் தியாகிதிலீபனின் 31வதுஆண்டுநினைவு வணக்கம்.

மட்டக்களப்பு போரதீவில்  தியாகி திலீபனின் 31வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல்  (புதன்கிழமை) மாலை4.00 மணியளவில் கோயில்போரதீவு மைதானத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தழிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனனாயக போராளிகள் கட்சியினர் இவ் நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பா.உ ஞா.ஸ்ரீநேசன், மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மா.நடராசா , மாநகரசபை பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர், மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டிருந்த அணைவரும் விளக்கேற்றி நினைவு கூர்ந்து தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக அகற்றப்பட வேண்டும் தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஜந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு திலீபன் என அனைவராலும் அறியப்படும் (இராசையா பார்த்தீபன்) தனது உயிரை தியாகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts