போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் 05 மணித்தியாலம் தொடர்  விசாரணை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும் புலனாய்வு

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நான்காம் மாடியில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2. 30 மணி வரையான 05 மணித்தியாலங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரிக்கப்பட்டார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரிடம் மாவீரர் தின கொண்டாட்டம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு ஆகியன குறித்து பல கேள்விகளையும் கேட்டதுடன் இவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
மாவீரர் தினத்தை ஜனநாயக போராளிகள் கட்சி எங்கெல்லாம் கொண்டாடியது? முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொண்டாடுவது ஏன்? என்று முக்கியமாக கேட்டு உள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூருவதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதாக வேந்தன் சொல்லியதுடன் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக போராளிகள் கட்சியின் நோக்கமாகும் என்றும் கூறி இருக்கின்றார்.
வேந்தன் பூசா, வெலிக்கடை ஆகியவற்றில் இரு வருடங்களுக்கு மேல் தடுப்பில் போடப்பட்டு, புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமுதாயத்தில் கலந்து வாழ விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts