மட்டக்களப்பில் அரசின் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமேரிக் உதவியில் புதிய திட்டம் அமுல்

சகவாழ்வினையும் அரசாங்கத்துடன் இணைந்து சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்த உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒன்றியம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமேரிக்க நாட்டின் உதவியில் மாவட்ட மட்டத்தில் புதிய திட்டங்களை அமுல் நடத்தவுள்ளது. 
 
பதவியிலிருக்கும் அரசாங்கம் விரும்புகின்ற நல்லிணக்கம்;, சகவாழ்வு, சமூக அபிவிருத்தி போன்ற திட்டங்களை கிராம மட்டத்தில் அமுல் நடத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். இதற்கமைய மாவட்ட ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் செயல்படும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக இந்த சகவாழ்வு நல்லிணக்கத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 
 
இந்த விசேட திட்டதின்கீழ் கண்டி சமூக அபிவிருததி நிறுவகத்தின் வழிகாட்டுதலில் கிழக்கு மாகாண சமாதானத்திற்கான மக்கள் ஒன்றியம், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச மட்டத்தில் புதிய திட்டங்கள் அமுல்படுத்தப் படவுள்ளன. 
இந்த நடவடிக்கைக்கமைய இந்தத் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டதில் அமுல் நடத்தும் பொருட்டு இம்மாவட்டத்தில் கடமை புரியும் 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலுமுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களை அறிவூட்டல் செய்யும் விசேட செயலமர்வு இன்று (23) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
 
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர். ஏ. நவேஸ்வரன், ஐ.எஸ்.டீ சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. எம்.எஸ். சபீக்கா, கிழக்கு மாகாண சமாதான ஒன்றியத்தின் இணைப்பாளர் பீ. தயாபரன், கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் இணைப்பாளர் வடிவேல் ரமேஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பீ. மயூரதன், சிறுவர் சிகிச்சை வைத்திய நிபுணர் விஸ்னு சிவபாதம் உட்பட பல வளவாளர்களும் கலந்து கொண்டு சமுக அபிவிருத்தி நல்லிணக்கம், சகவாழ்வு பற்றி அறிவூட்டல்களை வழங்கினர்
????????????????????????????????????

Related posts