மட்டக்களப்பில் மணல் கடத்தலில் பிடிபட்டவர்களுக்கு 4,60,000 ரூபா அபராதம்!

மட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேருக்கும் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதத்தை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களை நேற்று (புதன்கிழமை) சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அபராதப் பணம் செலுத்திய பின்பு உழவு இயந்திரங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 சாரதிகள் 3 உதவியாளர்கள், மற்றும் மணல் ஏற்றி செல்வதற்காக பயன்படுத்திய ஆறு உழவு இயந்திரங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

Related posts