மட்டக்களப்பில் 11 க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைப்பு –

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிங்க ஆலயத்தின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தை  (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற சமூகங்களுடன் இணைந்து காணப்படும் எல்லை சார்ந்த பகுதிகளிலேயே அதிகளவான ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்திற்குள் அத்துமீறி இவ்வாறான நாசக்காரச் செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. பொலிஸார் உடனடியாக இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2015ஆம் ஆண்டு முதல் 11 ஆலயங்களுக்கு மேல் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் சரியான குற்றவாளிகள் இனங்காணப்படவில்லை. இது தொடர்பான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டும்.

நலலிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related posts