மட்டக்களப்பு நகரில் “பாடுமீன் சமர்” நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி,புனித மிக்கேல் கல்லூரிகளுக்கிடையிலான 9ஆவது ஆண்டில் இவ்வருடம் மோதிக்கொள்ளும் பாடுமீன் சமர் (Bic match)கிரிக்கெட் ரெஸ்ட் போட்டியானது கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்(9-10.6.2018) காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுகள் ஆரம்பிப்பு விழா,பரிசளிப்புவிழா என இரு நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது.ஆரம்பிப்புவிழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களும்,கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம். அசங்க அபேவர்த்தனவும்,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர்களான அ.ஜெயநாதன்,வை.கோபிநாத் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.இதவேளை பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துப்பண்டாரவும்,கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம்,மட்டக்களப்பு வலயகல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரனும் ,விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ்,புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராசா, பழைய மாணவர் சங்கத்தலைவர்களான ஏ.ஏ.நவரெட்ணராசா,எஸ்.சசிதரன் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

Related posts