மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகத்தினரால் பாடசாலை தளபாட உதவி

மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகமானது டென்மார்க் றோட்டறி கழகத்தின் நிதி பங்களிப்புடன் ஒந்தாச்சிமடம் சிறிய விநாயகர் மகா வித்தியாலயத்திற்கான ஒரு தொகுதி தளபாடங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

 

 
மேற்படி பாடசாலை கடந்த சுனாமி அனர்த்த்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக பாடசாலையை அமைத்துக் கொடுத்திருந்த டென்மார்க் றோட்டரிக் கழகத்தினர் இவ்வருடம் பாடசாலையை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த வேளையில் பாடசாலை சமூகத்தினரினால் முன்வைக்கப்பட்டன வேண்டு கோளின் அடிப்படையில் குறித்த தளபாடங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
 
இதற்கமைவாக பத்து அலுமாரி, ஐம்பது இறப்பர் கதிரைகள் என்பன உத்தியோக பூர்வமாக பாடசாலை அதிபர் திருமதி.ம.பிரபாகரன் அவர்களிடம் மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகத்தினரால் கையளிக்கப்பட்டது. அதிபர் இதனை உத்தியோக பூர்வமாக பொறுப்பெடுத்து கொண்டார்.
இக் கையளிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு நகர் றோட்டறி கழகத்தின் சார்பில் கழகத்தின் தலைவர் எம்.செல்வராசா, செயலாளர் பேராசிரியர் கே.ஜீ.கருணாகரன், பொருளாளர்.பி.முத்துலிங்கம், கழகத்தின் திட்டப் பொறுப்பாளர் வைத்தியர் சிறிநாத், கழக பணியாளர்களான எஸ்.சரவணபவன்,கிருஸ்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பொருட்களை கையளித்து வைத்துடன் இரண்டாம் கட்ட தளபாடங்களை மிக விரைவாக கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்….

Related posts