மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்ச்சியால் இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரம் மிகவிரைவில் வழங்கப்படவுள்ளது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்ச்சியால் இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரம் மிகவிரைவில் வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் நீண்டகால கோரிக்கையாக இருந்த இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மிகவிரைவில் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தன்னுடைய தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து இத்தகவலை தெரிவித்ததாக  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று(1)
தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிக்கையில்…மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு
மேற்படி இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரம் 2013 ஆம் ஆண்டு சீன உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த அரசாங்கத்தில் சில அமைச்சு அதிகாரிகளால் அது களுத்துறை வைத்தியசாலைக்கு என பெயரிடப்பட்டிருந்தது.அவ்வியந்திரம் தற்போது இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில் அது களுத்துறை பொது வைத்தியசாலைக்கு வழங்குவதா அல்லது மட்டக்களப்பு வைத்தியசாலை போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதா என்ற இழுபறி நிலை காணப்பட்டது.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தலையீடு செய்து மட்டக்களப்பு வைத்தியசாலை போதனா வைத்தியசாலைக்கு என்ற அடிப்படையிலும், கிழக்கு மாகாணத்திலே இந்த வைத்தியவசதி வேறு எந்த வைத்தியசாலையிலும் இல்லையென்ற காரணத்தாலும்,அது ஏற்கனவே சீன உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாலும் குறித்த இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே வழங்கப்பட வேண்டுமென மேன்மை தங்கிய ஜனாதிபதி, கௌரவ பிரதமர்,சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் அவர்களின் தலையீட்டினையடுத்து மேற்படி இதய வடிகுழாய் அஞ்சயோகிராம் ஆய்வக இயந்திரத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே மிகவிரைவில் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இன்று திங்கட்கிழமை(1.3.2021) ஆளுநருக்கு இத்தகவலை தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Related posts