மட்டக்களப்பு -மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிபர் நலன்புரி சங்கத்தின் பாராட்டு விழா.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்முனை வடக்கு கோட்டத்தில் பல வருடங்களாக அதிபர்களாக இருந்து கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள 7 அதிபர்களையும்,அதிபராக கடமையாற்றி பிரதி கல்விப்பணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள இருவரையும்,ஓய்வு பெற்று சென்றுள்ள முன்னாள் மண்முனை கோட்டக்கல்வி பணிப்பாளரையும்,இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள கோட்டக்கல்வி பணிப்பாளரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிபர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும்,அதிபருமான இ.பாஸ்கர் தலைமையில் இன்று சனிக்கிழமை(3)காலை 10.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

ஓய்வு பெற்று சென்றுள்ளவர்களையும்,பதவியுயர்வு பெற்று சென்றுள்ளவர்களையும் மாலை அணிவித்து வரேவேற்பு அளிக்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றி,தலைமையுரை ஆற்றப்பட்டு,பாராட்டுக்குரியவர்களின் கல்விச்சேவைகள்,பாடசாலைகளின் வளர்ச்சிப்போக்கு போன்ற விடயங்கள் பற்றி பேசப்பட்டு பொன்னாடை போற்றி,பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(நிருவாகம்)திருமதி.சாமினி ரவிராஜ்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி S.P.ரவிச்சந்திரா,மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முதல்வர் பயஸ் ஆனந்தராஜா ,வின்சட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் முதல்வர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார்,கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலையின் முதல்வர் திருமதி.நவநீதா தருமசீலன் ஆனப்பந்தி மகளிர் பாடசாலையின் முதல்வர் எஸ்.சதீஸ்வரன் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது கலந்து கொண்ட அதிதிகளினால் ஓய்வு பெற்று சென்றுள்ள அதிபர்களையும்,பதவியுயர்வு பெற்று சென்றுள்ள பிரதிக்கல்வி பணிப்பாளர்களையும்,ஓய்வு பெற்றுச் சென்றுள்ள கோட்டக்கல்வி பணிப்பாளர்களையும் பொன்னாடை போற்றி,மலர்மாலை அணிவித்து,பாராட்டுபத்திரம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.மண்முனை வடக்கு அதிபர் நலன்புரிச்சங்கத்தின் செயலாளரும்,அதிபருமான இ.இலங்கேஸ்வரனின் நன்றியுரையுடன் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகள் முடிவுற்றது

Related posts