மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

மட்டக்களப்பு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமானது 27.06.2021 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை, வர்த்தக நிலையங்களின் வர்த்தக செயற்பாடுகள், வர்த்தகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் இக் காலகட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பாகவும், அதற்காக அரச நிறுவனங்கள் எவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தெடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை காலை தொடக்கம் இரவு 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆலயங்கள் மற்றும் அனைத்து மதஸ்தானங்களிலும் ஆராதனைகள் உற்சவங்கள் இடம்பெற தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின்படி எந்தவிதமான ஆலய உற்சவங்களும் விழாக்களும் இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கைக்கு அமைய ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தாக்கள் ஆலய உற்சவங்களையே விழாக்களையே தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.

அதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்தப்பட்ட நிலையில் சில மாநகரசபை, நகரசபை வர்தகநிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியது இதனால் வேறு நேரங்களில் மூடுவதால் சில குளறுபடிகள் இருந்தது இதற்கிணங்க இன்று காலையில் இருந்து மாலை 9 மணிவரை அனைத்துவர்த்தக நிலையங்களும் திறக்க அனுமதிப்பதுடன் இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தகநிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. 

அதேவேளை வர்த்தக உரிமையாளர்கள் வர்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் கண்டிப்பாக சுகாதார அறிவுறுத்தலை பேணி நுகர்வேரை அதிகமாக உள்வாங்காது முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்கவேண்டும் கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். இந்த செயற்பாடுகளை வர்த்தகநிலைய உரிமையாளர்கள் கவனம் செலுத்தாதுவிட்டால் அவர்கள் மீதும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேவேளை கடந்த 24 மணித்தியாலயத்தில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 72 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

Related posts