மட்டக்களப்பு மாவட்ட கூட்டெரு உற்பத்தியாளர்களுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

சேதனப் பசளை உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக அதிமேதகு ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநரினால் பல்வேறு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கூட்டெரு உற்பத்தியினை மேலும் விஸ்தரிக்கும் nநோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட கூட்டெரு உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கருணாகரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூட்டெரு உற்பத்தியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இதன்போது ஜனாதிபதியின் நஞ்சற்ற நாடு கொள்கைத் திடத்தின் நோக்கம் பற்றியும் சேதனப் பசளை உற்பத்தியில் கூட்டெரு தயாரிப்பு விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts