மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய  விளையாட்டு விழா  வலயக்கல்வி பணிப்பாளர்  செல்வி. அகிலா கனகசூரியம் தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பான முறையிலே ஆரம்பமானது.   நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ,வியாளேந்திரன் மற்றும்  மேலதிக மாகாணக்கல்வி பணிப்பாளர் சி.மனோகரன் மற்றும்  பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்
உரையாற்றிய ஸ்ரீநேசன் இவ்வாறானதொரு நிகழ்வை காண்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏன் என்றால் நகர பாடசலைகளுக்கு இணையாக சிறப்பாக நடாத்தயுள்ளீர்கள். வரவேற்க தக்க விடையம் அத்தோடு இந்த கல்வி வலயமானது கல்வி பொ.சா.த பரீட்சையில் 98 வது இடத்தில் இருந்த இந்த வலயம் 93வது இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது என்றால் இது இங்குள்ள அனைவரினதும் செயற்பாடாகும்.
இனிவருகின்ற காலங்களில் மென்மேலும் வளர்ச்சி அடைய நான் வாழ்த்துகின்றேன்.எனக் குறிப்பிட்டார்.

Related posts