மட்டு ஊடக அமையம் உத்தியோகபூர்வமாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

(சா.நடனசபேசன்,க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலைய கட்டிடத்தொகுதியில் மட்டு ஊடக அமையம் உத்தியோகபூர்வமாக இன்று காலை  திறந்து வைக்கப்பட்டது.
 

மட்டக்களப்பின் ஊடகத்துறை வரலாற்றில் மற்றுமொரு பதிவாக மட்டு ஊடக அமையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இன்று(3)காலை 10.00மணியளவில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் அமையப்பெற்றுள்ள கட்டிடத்தில் மட்டு ஊடக அமையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதி அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்,மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,ம த த் தலைவர்கள்  ஆகியோரினால் மட்டு ஊடக அமையம் திறந்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வில் மாவட்ட ஊடகவியலாளர்கள்,மும்மதத்தலைவர்கள்,பொதுமக்கள்  கலந்துகொண்டார்கள்.
 

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க,ஐயாத்துரை-நடேசன்,தருமரெத்தினம்-சிவராம்,சு.சுகிர்தராஜன்,மயில்வாகனம்-நிமலராஜன்,போன்றோருக்கு மலரஞ்சலி செலுத்தி நினைவுகூரப்பட்டது.

மேற்படி ஊடக அமையத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஊடக சந்திப்புக்கள் அனைத்தும் இடம்பெறும் என்பதை மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Related posts