மட்டு மாநகர முதல்வருக்கு எதிராக மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் ஆளுநருக்குக் கடிதம் சமர்ப்பிப்பு…

மட்டக்களப்பு மாநகர முதல்வர் உரிய முறையில் அதிகாரக் கையளிப்பினை மேற்கொள்ளாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டமை தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரால் மாநகரசபை முதல்வருக்கு எதிராக மாநகரசபைச் செயலாளரூடாக உள்ளுராட்சி ஆணையாளருக்கும், ஆளுநருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் ஏனைய ஐந்து உறுப்பினர்கள் இந்தியப் பயணம் மேற்கொண்டமை தொடர்பில் சபைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும், சபையில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சபைக்கான அதிகாரம் தொடர்பில் உரிய பிரதிநிதி நியமிக்கப்படவில்லை எனவும், முறையான அதிகாரக் கையளிப்பு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்து உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தின் அடிப்படையில் பொதுச்சபையைக் கூட்டி உரிய முறையிலான அதிகாரப் கையளிப்பினை மேற்கொள்ளுமாறும் மாநகரசபையின் உறுப்பினர்கள் சிலரினால் ஒப்பமிடப்பட்ட கடிதம் மாநகர மாநகரசபைச் செயலாளரூடாக உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் பிரதி ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இக்குறிப்பிட்ட கடிதத்தில் மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.கிளனி வசந்தகுமார், கு.காந்தராஜா, டி.சிவானந்தராஜா, எஸ்.ராஜன், எம்.மோகன், ந.திலிப்குமார், ஏ.சுசிகலா, ந.வர்ணேஸ்வரி, வ.குபேரன், எஸ்.சுலக்சனா, பி.சிவலிங்கம், பி.பற்றிமா, வி.சசிகலா, டி.கௌரி, பி.சுரேஸ்குமார், கே.ரொனி பிரின்ஸஸ் ஆகியோர் ஒப்பமிட்டு மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் உட்பட ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts